மின் கட்டணம் கண்ணைக் கட்டுகிறதா... மின் சேமிப்புக்கு 10 டிப்ஸ்!

குண்டு பல்புகளுக்குப் பதிலாக CFL அல்லது LED விளக்குகளைப் பயன்படுத்தலாம்.

பகலில் இயற்கை காற்றையும், சூரிய ஒளியையும் அதிக அளவில் பயன்படுத்தவும்.

அதிக நட்சத்திரக் குறியீடு (எலெக்ட்ரானிக் பொருட்களின் ஸ்டார் ரேட்டிங்), அதிக மின் சேமிப்பின் அடையாளம்.

வர்றான்... 'WOW' Fact சொல்றான்... வைரல் வீடியோ அனுப்புறான்... ரிப்பீட்டு..! 

இதெல்லாம் உங்க வாட்ஸப்க்கே வரணுமா? 8189911000 இந்த நம்பரை உங்க மொபைல்ல சேவ் பண்ணிட்டு ஹாய்னு ஒரு மெசேஜ் தட்டுங்க.

Arrow

மின் செலவைக் குறைத்திட ஏ.சியை 25 சென்டிகிரேட் அளவில் இயங்கும்படி வைக்க வேண்டும்.

குளிருட்டி இயங்கும் போது மின் விசிறியைப் பயன்படுத்துவதால் அறை முழுவதும் குளிர் சீராக பரவும்.

மின் சூடேற்றிக்குப் பதிலாக சூரிய சக்தி நீர் சூடேற்றியைப் (Solar Water Heater) பயன்படுத்தவும்.

ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற / நட்சத்திரக் குறியிட்ட மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சுவர்களுக்கு வண்ணம் அடிக்கும்போது அடர்த்தி குறைந்த நிறங்களை தேர்வு செய்ய வேண்டும்.

டியூப் லைட்டுகளில் பழைய சோக்குகளை மாற்றிவிட்டு தற்போது வந்துள்ள எலக்ட்ரிக் சோக்குகளை பயன்படுத்தலாம்.

வாஷிங் மெஷினில் உலர வைக்கும் கருவிகளை தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெயில் காலங்களில் துணிகளை வெளியில் காயப்போடலாம்.