`ஆண்டவன் ஏன் இவ்வளவு அல்ப்ப பயலா இருக்கான்?!’ - சூப்பர் டீலக்ஸ் படத்தின் 10 `நச்’ வசனங்கள்!
விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் தியாகராஜன் குமாரராஜன் இயக்கத்தில் யுவன் இசையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற படம், சூப்பர் டீலக்ஸ். அந்தப் படத்தில் இடம்பெற்ற சிறந்த 10 வசனங்கள்...
`இவன் ஆட்சில கரண்ட் கட் ஆகுது. சரினு அவனுக்கு ஓட்டு போட்டா அப்பவும் கரண்ட் கட் ஆகுது. ஆனால், கூட்டம் கூட்டமா போய் ஓட்டு போடுறோம். மேதமெடிக் ஃபார்முல ஒரு தனியாள் கண்டுபிடிக்கிறான். சயிண்டிஃபிக் இன்வென்ஷன், உயிரைக் காப்பாத்துற மருந்து தனியாள் பண்றான். நாம கூட்டம் கூட்டமா என்ன பண்றோம்? பஸ்ஸ கொளுத்துறோம். கடையை உடைக்கிறோம். மாப் மெண்டாலிட்டி.
இந்தியன் என்பதில் பெருமை கொள்ளனும். தமிழன்னு சொன்னா தலை நிமிர்ந்து நிக்கணும். ஆனால், ஜாதினு சொன்னா மட்டும் தப்பு. எல்லாம் கூட்டம்தான! இது சின்னது அது பெருசு. தேசத்துக்கு பக்தி. மொழிக்கு பற்று. ஆனால், ஜாதினா மட்டும் வெறி. செம போங்கு. இவன் ஜாதிங்குற பேருல மத்த ஜாதி காரன்கிட்ட இருந்து நம்மள பிரிக்கிறான். அவன் நாடுங்குற பேருல மத்த நாட்டுக்காரன்கிட்ட இருந்து நம்மள பிரிக்கிறான். நான் இது சரினு சொல்லல. இது தப்புனா அதுவும் தப்பு. சொன்னா ஒரு பய ஒத்துக்க மாட்டான்.
நம்ம அக்கௌண்ட்ல காசு இல்லாமல் செக் பவுன்ஸ் ஆனா 250 ரூபாய் புடுங்குறாங்கள்ல. அந்த மாதிரி அவங்க மெஷின்ல காசு இல்லைனா நமக்கு 250 ரூபாய் கொடுக்கணும்ல. சிஸ்டமே இப்படிதான். சிக்னல்ல நிக்கலைனா நம்மக்கிட்ட இருந்து 100 ரூபாய் புடுங்கிருவானுங்க. அதே சிக்னல் வேலை செய்யலைனா நமக்கு 100 ரூபாய் கொடுக்கணும்ல? கொடுக்க மாட்டாங்க.
நாம செருப்பு போடும்போது சில சமயம் கால மாத்திப் போடுவோம் இல்லையா, அந்த மாதிரி சாமி என்னை உடம்பு மாத்தி போட்டிருச்சு.