`நீங்க எடுத்துட்டுபோய் அடகே வைக்கலாம்!’ - குக் வித் கோமாளி புகழின் 10 `Thug Life' மொமண்டுகள்

மக்கள் மத்தியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வழியாக பிரபலமானவர், புகழ். அவர் அந்த நிகழ்ச்சியில் செய்த தரமான 10 தக் லைஃப் மொமண்டுகள் இங்கே...

புகழ்: இந்த பொட்டேட்டோவ நார்மலா சிக்கன் மாதிரியே சாப்பிடலாம்! சிவாங்கி: எப்படி? புகழ்: வாயாலதான்!

ரம்யா பாண்டியன்: உருப்படாத, முன்னேறாத ஒரே துறை இருக்கு. அது என்ன துறை? புகழ்: தங்க துரை

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

தாமு: புகழ் தீஞ்சு போச்சுப்பாரு புகழ்: இல்லப்பா, அது இதுக்காக வைச்சுருக்குறது! தாமு: எதுக்காக வைச்சுருக்க? புகழ்: அதான் தெரியலை, எதுக்காக வைச்சுருக்குனு!

புகழ்: இப்போ ஆட்கள் நிறைய இருக்காங்க. தேவைப்பட்ட ஆள்... தேவைப்படுற ஆள எடுத்துக்கோங்க! ரக்‌ஷன்: இந்த ஷோ வேற ஷோ டா! புகழ்: அதான் மாப்ள சமையல்லதான் சொல்றேன்!

வெங்கடேஷ் பட்: என்னடா, சொரணையே இல்லை உனக்கு? புகழ்: இல்லைங்க, விஜய் டி.வில வொர்க் பண்றேன்.

புகழ்: தங்கச்சி, அஷ்வின் கை கட் ஆயிடுச்சாம். சிவாங்கி: என்னாச்சு...என்னாச்சு... புகழ்: இல்லை ஒண்ணும் ஆகல. உன்னோட ரியாக்‌ஷன் எப்படி இருக்குனு பார்த்தேன்.

அஷ்வின்: நம்ம ஸ்வீட் பண்ணப்போறோம்டா. நம்மூர் ஸ்வீட் இல்லை. வெளிநாட்டு ஸ்வீட்டு! புகழ்: பாஸ்போர்ட் எடுத்துட்டு வந்தியா?!

வெங்கடேஷ் பட்: நல்லா பவுன் கலர்ல எனக்கு தோசை வரணும்! புகழ்: நீங்க எடுத்துட்டுபோய் அடகே வைக்கலாம். அப்படி வரும் பாருங்க.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

வெங்கடேஷ் பட்: காத்துல அஷ்ட தேவதைகள் நடந்துட்டே இருக்கும்! புகழ்: நடக்காதீங்க. ஷூட் போய்ட்டு இருக்கு. உட்காருங்க!

தாமு: என்ன டிஷ் பண்ற? புகழ்: கறி எலும்பு... கேக்காத கெளம்பு!

புகழின் எந்த கவுண்டர் உங்களுக்கு புடிச்சுதுனு கமெண்ட்ல சொல்லுங்க!