`ரொம்பவே புடிச்சது முதல் புடிக்காதது வரை’ - பி.டி.எஸ் சுகா பற்றிய சுவாரஸ்யமான 13 தகவல்கள் #HBDSUGA

பி.டி.எஸ் குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவ்வகையில், மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உடைய சுகா பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம்!

சுகா வேகமா சாப்பிடுவாராம். இதுவரைக்கும் அவர் சாப்பிட அதிகமாக எடுத்துக்கொண்ட நேரம் 20 நிமிஷம்தானாம்.

காமிக்ஸ் புத்தகங்கள் படிக்கவும் வீடியோ கேம்ஸ் விளையாடவும் சுகாக்கு ரொம்பவே புடிக்குமாம்.

புகைப்படம் எடுக்குறதுல சுகா ரொம்பவே ஸ்பெஷலிஸ்ட்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்குக்கு தனியா போனும்ன்றது சுகாக்கு ரொம்ப நாள் ஆசையாம்.

சுகா 6வது படிக்கும்போதே பாட்டு கத்துக்க ஆரம்பிச்சுட்டாராம். ஒவ்வொரு நாளும் ஒரு பாட்டு எழுதுவாராம்.

சுகா ரொம்பவே சோம்பேறியா இருக்குறதால `Motionless Min’னு அவருக்கு பட்டப்பெயர் உண்டு.

எங்க கிளம்புனாலும் சுகா தன்னோட பேக்ல எடுத்து வைக்கிற முதல் பொருள் லேப்டாப்தான்.

பி.டி.எஸ் டீம்லயே சுகாதான் ரொம்பவே ஸ்ட்ரெயிட் ஃபார்வேட் ஆன பெர்சனாம். எதாவது தப்புனு தோணிச்சுனா டப்புனு பேசி விட்ருவாராம்.

சுகாவுக்கு ரைமிங்னா ரொம்பவே புடிக்குமாம். அதனால ஜே - ஹோப் அவரை ரைமிங் மெஷின்னு சொல்வாராம்.

சுகாவுக்கு டேன்ஸ் ஆடுறது கொஞ்சம்கூட புடிக்காதாம்.

சுகாவுக்கு அதிகமா கோவம் வருமாம். அப்போலாம் அவரோட டீம் மெம்பர்ஸ் சிரிப்பாங்களாம். ஏன்னா, ரொம்பவே சுகா கோவப்பட்டா கியூட்டா இருப்பாராம்.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

 என்ன ஹேர் கலர் வைச்சாலும் அந்த டீம்ல பக்காவா செட் ஆகுற ஒரு ஆள் சுகாதான். ஏன்னா, அவரோட ஸ்கின் அவ்வளவு அழகா இருக்குமாம். 

பி.டி.எஸ் டீம்லயே எல்லாரையும் அக்கறையா பார்த்துக்குற ஒரு ஆளும் சுகாதானாம்.

பி.டி.எஸ் டீமில் உங்களுக்குப் பிடித்த நபர் யாருனு கமெண்ட்ல சொல்லுங்க!