அப்துல்கலாமின் 15 பொன்மொழிகள்!

முடியும் வரை முயற்சி செய்.. உன்னால் முடியும் வரை அல்ல.. நீ நினைத்த செயல் முடியும் வரை.

பிரபஞ்சத்தை விட அபார சக்தி கொண்டது உன் மூளை.. பிறகென்ன கவலை?

நல்ல எண்ணங்கள் வளர வளர உள்ளத்தில் வலுவான சக்திகள் உருவாகும்.

திடமான மனதுடன் வாழ்ந்தால் என்றென்றும் வளர்ச்சியடையலாம்.

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.

சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தால்தான் சாதனை படைக்க முடியும்.

மகத்தானவர்கள் காணும் மகத்தான கனவுகள் எப்போதும் நனவாகின்றன.

வெற்றி என்பது நம் நிழல்போல.. வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது அது நம் பின்னால் வரும்.

உறங்கும்போது உருவாவது அல்ல கனவு! உங்களை உறங்கவிடாமல் செய்கிறதே அதுதான் கனவு.

சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை. துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.

உன் கைரேகையை பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.

நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.

கருப்புநிறம் சகுனத்தடையாக உணர்கிறோம். ஆனால், ஒவ்வொரு கருப்பு நிற கரும்பலகைதான் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றுகிறது.

காலத்தின் மணல் பரப்பில்.. உன் கால் சுவடுகளைப் பதிக்க விரும்பினால்.. உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!

வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்னைகளோடு போராடித் தீர்வு காண முடியும்.