பராசக்தி  15 'வாவ்' தகவல்கள்!

தமிழ் சினிமாவில் புதிய பாதையைத் திறந்துவைத்த படம் 1952-ல் வெளியான பராசக்தி.

நடிகர் சிவாஜி கணேசன் அறிமுகமான இந்தப் படத்தில் அவர் பேசிய முதல் வசனம், `சக்ஸஸ்... சக்ஸஸ்’ என்பதுதான்.

ஏ.வி.மெய்யப்ப செட்டியாரும் விநியோகஸ்தரான பி.ஏ.பெருமாளும் இணைந்து தயாரித்த முதல் படம். இதில், கே.ஆர்.ராமசாமியையே ஹீரோவாக நடிக்க வைக்க ஏ.வி.எம் முதலில் நினைத்திருந்தாராம்.

பாலசுந்தரம் எழுதிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான பராசக்தி படத்துக்கு முதலில் அவரையே திரைக்கதை, வசனம் எழுத அணுகியிருக்கிறார்கள்.

இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு கூறிய சில விஷயங்களை அவர் ஏற்க மறுக்கவே, திருவாரூ தங்கராஜ் வந்து, ஒரு சில காரணங்களால் அவரும் மாற்றப்பட்டு கருணாநிதி உள்ளே வந்திருக்கிறார்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

ஆயிரம் அடி எடுத்துப் பார்த்துவிட்டு சிவாஜியை மாற்ற வேண்டும் என்று ஏ.வி.எம் உள்பட பலரும் விருப்பப்பட்டிருக்கிறார்கள். ஆனால், பி.ஏ.பெருமாள் பிடிவாதமாக பராசக்தியின் ஹீரோ சிவாஜி கணேசன் என்பதில் உறுதியாக இருந்தார்.

1952 தீபாவளிக்கு வெளியான பராசக்தி படம் சிவாஜிக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்குமே புத்துயிர் கொடுத்த படம்.

14,000 அடி ஷூட் செய்த பிறகு ரஷ்ஷைப் பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு சிவாஜி நடிப்பின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. `இந்தப் பையன் நல்லா நடிக்கிறாரே... ஆரம்பத்தில் கொஞ்சம் சரியாக நடிக்கவில்லையோ’ என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது.

சினிமாவில் அறிமுகப்படுத்தி தனக்கு வாழ்க்கை கொடுத்த பி.ஏ.பெருமாள் முதலியாரின் குடும்பத்தினருக்கு சிவாஜி, தனது நன்றிக்கடனை செலுத்துவதில் உறுதியாக இருந்தார். சிவாஜி மறைவுக்குப் பிறகும் அந்த நன்றிக்கடனை அவரின் வாரிசுகளான ராம்குமாரும் பிரபுவும் செலுத்தி வருகிறார்கள்

கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதினார். படத்தில் இடம்பெற்றிருந்த வசனங்களுக்குக் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது. ஒரு கட்டத்தில் மாநில அரசாங்கமே படத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆனால், படம் வெளியாகி 175 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தமிழ் சினிமாவை புதிய பாதையை நோக்கி திருப்பியது.

படத்தின் வசனங்கள் எந்த அளவுக்குப் பிரபலம் என்றால், அது தனியே இசைத்தட்டாகப் போடப்பட்டு விற்பனையில் ஹிட்டடித்தது.

`இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைக் கண்டிருக்கிறது...’ எனத் தொடங்கி சிவாஜி பேசும் கோர்ட் ரூம் டயலாக் ரெஃபரென்ஸை இன்று வரையில் பல படங்களில் நம்மால் பார்க்க முடியும்.

படத்தில் இடம்பெற்றிருந்த கோயில் காட்சி ஒன்றும் பிரசித்தி பெற்றது. அந்தக் காட்சி பற்றி குணசேகரன் கேரக்டரில் வரும் சிவாஜி பேசுவதாக இப்படி ஒரு வசனம் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

`கோயிலில் குழப்பம் விளைவித்தேன். கோயில் வேண்டாம் என்பதற்காக அல்ல... கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக..’. திராவிட இயக்கங்கள் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானதல்ல என்பதை நாசூக்காகச் சொல்லியிருப்பார் கருணாநிதி.

தனது மறைவுக்குப் பிறகும் இது நிற்கக்கூடாது என ராம்குமாருக்கும் பிரபுவுக்கும் அன்புக் கட்டளை இட்டிருந்தாராம். அதனால், அந்த வழக்கம் இப்போதும் தொடர்கிறது.