நான் சொல்ல விரும்புவதை கிரவுண்டில் வெளிப்படுத்தவே விரும்புகிறேன்.
"
"
தலைமைப் பண்பு என்பது நமது எண்ணங்களை, நோக்கங்களை நிஜமாக்கும் திறமையே..!
"
"
மைதானத்தில் கூடியிருப்பவர்களுக்காக நீங்கள் விளையாடவில்லை; உங்கள் நாட்டுக்காகக் களமிறங்கியிருக்கிறீர்கள்.
"
"
உள்ளுணர்வு என்பது முழுக்க முழுக்க உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற்ற அனுபவம் மூலம் வருவது. கடினமான சூழலில் எது சரியாக வரும்; சரியாக வராது என்பதை அறிந்து, அதை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுப்பீர்கள்.
தன்னம்பிக்கை என்பது எப்போது என்னுடைய நல்ல தகுதிகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. எப்போதும் நான் தன்னம்பிக்கையுடன் இருப்பேன். நம்பிக்கையாக இருப்பது என்னுடைய இயல்பு. பேட்டிங்கின்போதும், விக்கெட் கீப்பிங்கின்போதும் அது வெளிப்படும்.
"
"
உண்மையிலேயே உங்களுக்குக் கனவு என்ற ஒன்று இல்லையென்றால், அடுத்த கட்டத்துக்கு நகர நீங்கள் முயற்சிக்க மாட்டீர்கள். உங்களின் இலக்கு என்ன என்பது கூடத் தெரியாமல் போய்விடும்.
"
"
களத்தில் நூறு சதவிதத்துக்கும் மேலான ஈடுபாட்டைக் கொடுக்கவே நான் விரும்புகிறேன். அப்படியான ஈடுபாட்டைக் கொடுக்கையில் முடிவுகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனக்கு அதுதான் வெற்றி.
"
"
அமைதியாக உங்களது நடவடிக்கைகளை முன்னெடுங்கள். எந்தவொரு சிங்கமும் சத்தமிட்டுக் கொண்டே தாக்காது.
"
"
வீட்டில் மூன்று நாய்களை நான் வளர்க்கிறேன். ஒரு தொடரில் தோல்வியடைந்திருந்தாலும், வெற்றிபெற்றிருந்தாலும், அவை என்னை ஒரே மாதிரியே நடத்தும்.
"
"
நான் தேசத்துக்கான பணியில் இருக்கிறேன். மற்றவை எல்லாம் காத்திருக்கலாம்.
"
"
நான் கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்த காரணம், அது எனக்கு நன்றாக வரும் என்பதால். ஓய்வுபெற்ற பிறகு ராணுவத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். எப்போதும், தாய்த் திருநாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம்.
களத்தில் நூறு சதவிதத்துக்கும் அதிகமான ஈடுபாட்டைக் கொடுக்க வேண்டும் என்பதையே நான் நம்புகிறேன். களத்தில் முழு ஈடுபாட்டை நாம் கொடுக்கையில், முடிவுகளைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். என்னைப்பொறுத்தவரை அதுதான் வெற்றி.
"
"
நீங்கள் நூறு சதவிகித உடற்தகுதியுடன் இல்லாவிட்டால் அல்லது சிறந்த சூழலில் இல்லை என்றால், அப்போதும் நீங்கள் விளையாடிக் கொண்டிருந்தால், அது ஏமாற்று வேலை.
"
"
மூத்தவர்கள் சொல்வதைக் கேளுங்கள்; அவர்கள் எப்போதும் சரியானதையே சொல்வார்கள் என்பதற்காக அல்ல... தவறான முடிவுகள் எடுப்பதில் அவர்கள் உங்களை விட அனுபவம் பெற்றவர்கள்.
"
"
தோல்விகள் உங்களை எதிர்க்கொள்வதில் தோல்வியடையும் வரை, தோல்விகளை முகத்துக்கு நேராக எதிர்க்கொள்ளுங்கள்.
"
"
நீங்கள் நிறைய போட்டிகளை வெற்றிகரமாக முடிக்கும்போது, எந்தப் போட்டிகளையெல்லாம் உங்களால் வெற்றிகரமாக முடிக்க இயலவில்லை என்பதை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.
"
"
என்னால்தான் இந்திய கிரிக்கெட் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது என்ற காரணம் மூலம் என்னை நீக்குவதை நீங்கள் நியாயப்படுத்திவிட்டால், நானாகவே ஒதுங்கிவிட விரும்புவேன்.