``மௌனத்தை விட சிறந்த மொழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அர்த்தங்களுக்கு ஏற்ப வார்த்தைகள் கிடைப்பதில்லை. அந்த சமயம் எண்ணங்களை மௌனங்கள் மட்டுமே வெளிப்படுத்தும். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் போன்ற எனது படங்களில் மௌனம் அதிகமாக இருப்பதாகச் சொல்வார்கள். உண்மைதான், எனது படங்களுக்கு பெரும்பாலும் வசனங்கள் எழுதியது இளையராஜாதான்” - மகேந்திரன்
நீச்சல் தெரியாத விஜயன் தனக்குத்தானே தண்டனை வழங்கிக் கொள்ள ஆற்றுக்குள் முழ்கி இறக்க வேண்டும். விஜயனும் மறுபேச்சின்றி அதனை ஏற்றுக்கொள்கிறார். அப்பொழுது அவரைப் பார்க்க குழந்தைகள் வருகின்றனர். நன்றாகப் படித்து நல்லவர்களாக வளர வேண்டும் என்று குழந்தைகளிடம் கூறுகிறார். இதன்பின், ஆற்றில் இறங்கி இறந்துவிடுவார். மிகவும் நெகிழ்ச்சியான காட்சியாக இதனை மகேந்திரன் காட்சிப்படுத்தியிருப்பார்.