அர்ஜூன் நடிச்ச `ஜெய்ஹிந்த்’ படத்தை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. ஏன்னா... சுதந்திர தினம், குடியரசு தினம்னு எல்லா தினத்துக்கும் இந்தப் படத்தைக் கண்டிப்பா டிவில போட்ருவாங்க. அந்தப் படத்தோட பாட்டும் இன்னைக்கு வரைக்கும் மக்கள் மத்தியில் ரொம்பவே ஃபேமஸ். ’ஜெய்ஹிந்த்’ படத்தின் பாடல் முழுவதையும் வித்யாசாகர் 30 நிமிஷத்துல கம்போஸ் பண்ணி முடிச்சிட்டாராம்.
பறவை முனியம்மானு சொன்னதும் நமக்கு நியாபகம் வர்றது `தூள்’ படம்தான். அதுலயும் குறிப்பா `சிங்கம் போல நடந்துவரான்’ பாட்டு. அந்தப் பாடலைப் பாடதான் வித்யாசாகர், பறவை முனியம்மாவை அழைச்சிட்டு வந்துருக்காரு. ஆனால், அவங்களைப் பார்த்த அப்படத்தோட இயக்குநர் இவங்களை படத்துல நடிக்க வைக்கலாமேனு கூட்டிட்டு போய்ருக்காரு. இப்படி பறவை முனியம்மா தமிழ்நாடு முழுவதும் ஃபேமஸாக அடித்தளமா இருந்தது வித்யாசாகர்தான்.
வித்யாசகர்னு சொன்னதும் நமக்கு நியாபகம் வர்ற முதல் பாடல் `மலரே மௌனமா’தான். இன்னைக்கு வரைக்கும் பலரோட ஃபேவரைட் லிஸ்ட்ல இந்தப் பாட்டுக்கு இடம் உண்டு. எஸ்.பி.பி இந்தப் பாட்டு ரெக்கார்டிங் அப்போ வித்யாசகர்கிட்ட, “ஒரு வருஷத்துக்கு 1000 பாட்டுலாம் எங்களுக்கு கொடுக்கத் தேவை இல்லை. இந்த மாதிரி ஒரு பாட்டு கொடுத்தா போதும்”னு சொல்லியிருக்காரு.
வித்யாசாகர் கரியர்ல குறிப்பிட்டு சொல்லணும்னா 2 படங்கள். ஒண்ணு அன்பே சிவம். இன்னொன்னு சந்திரமுகி. அன்பே சிவம் படத்துல கிளைமேக்ஸ் முடிஞ்சு எண்ட் கார்டு போடும்போது பாட்டு தியேட்டர்ல ஓடிக்கிட்டே இருந்துச்சாம். ஆனால், ஆடியன்ஸ் யாரும் சீட்ட விட்டு எழும்பாம பாட்டு கேட்டு மெய்மறந்து உட்கார்ந்திருந்தாங்களாம். அதேமாதிரி, சந்திரமுகி படத்தோட பாடல்கள் எல்லாம் வேற லெவல் ஹிட். 890 நாள் இந்தப் படம் ஓடிச்சு. இதுக்கு அந்தப் படத்தின் பாடல்களும் முக்கியமான காரணம்.