நியூமராலஜி; இலை வசனம்; 2021 தேர்தல் - செந்தில் பாலாஜி...5 சுவாரஸ்யங்கள்!
தமிழ்நாட்டில் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் பெற்றவர்களே படைக்காத சாதனையை வெறும் 26 ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டிய நிஜ நாயகனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கே காணலாம்...
1) செந்தில்பாலாஜி - நியூமராலஜி!
அ.தி.மு.க-வில், 2000-மாவது ஆண்டு மார்ச் 13-ம் தேதி, இணைந்த செந்தில் குமார், தனது பெயரை நியூமராலஜிப்படி மாற்ற முடிவு செய்தார். கரூர் தாந்தோன்றிமலை பெருமாள்தான் செந்தில்பாலாஜியின் குலதெய்வம்; அவருக்கும் இஷ்ட தெய்வம்.
அதோடு, ஜெயலலிதாவிற்கும், சசிகலாவுக்கும் இஷ்ட தெய்வம் பெருமாள்தான் என்பதாலும், செந்தில் குமார் என்ற பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக் கொண்டார். நியுமராலஜியில் நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ… இல்லையோ… செந்தில் பாலாஜிக்கு அது நன்றாகவே வேலை செய்தது.
2) பொக்லைன் முன் போராட்டம்!
கரூரில் தி.மு.க-வைச் சேர்ந்த கே.சி.பழனிச்சாமி மணல் கடத்தலில் ஈடுபடுகிறார். அதைத் தடுக்கிறேன் என்று கொதித்தெழுந்த செந்தில் பாலாஜி, பொக்லைன் இயந்திரத்தின் முன் படுத்து போராட்டம் நடத்தினார். அது, அன்றைக்கு பரபரப்புச் செய்தியானது.
போயஸ் கார்டனின் பார்வை செந்தில் பாலாஜி மீது அழுத்தமாக விழுந்தது. அதோடு, சசிகலாவின் அண்ணி இளவரசி மற்றும் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் நட்பும் செந்தில் பாலாஜிக்கு கிடைத்தது. அதோடு கரூர் மாவட்டச் செயலாளர் பதவியும் அவரைத் தேடி வந்தது.
செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது இந்தியா டுடே , டெல்லியில் சிறந்த மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விருது வழங்கும் விழாவை நடத்தியது. அந்த விழாவில் கலந்து கொள்ள முடியாத ஜெயலலிதா, தனது அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று சொல்லிவிட்டார்.
அமைச்சர்களுக்கு அந்தத் தகவல் சென்று சேரவில்லை. இதனையடுத்து, நள்ளிரவில் கிடைத்த அழைப்பிதழ்களை எடுத்துக் கொண்டு மறுநாள் காலை ஜெயலலிதாவிடம் அனுமதி வாங்க, நான்கு அமைச்சர்கள் போயஸ் கார்டன் சென்றனர். அவர்களில் உள்ளே அழைக்கப்பட்டவர் செந்தில் பாலாஜி மட்டும்தான்.
சென்னையில் மினி பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு செயல் வடிவம் கொடுத்தது செந்தில்பாலாஜிதான். ஸ்மால் பஸ்களில் 'இரட்டை இலை’ சின்னத்தைப் போட்டு அங்கும் அம்மா 'லைக்ஸ்' குவித்தார். எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கிளப்பியபோது, 'வீட்டுக்கு வரும் விருந்தாளிக்கு உணவு தரப்படைப்பது, வாழை இலை.
உணவில் வாசத்தை ஏற்படுத்துவது, கருவேப்பிலை. உணவாகவே சமைக்கப்படுவது, கீரை இலை. சாப்பிட்ட பிறகு போடுவது, வெற்றிலை. வீட்டு வாசலில் அலங்கரிப்பது, மாவிலை. மனிதனின் நோய் போக்குவது, துளசி இலை. இப்படி தமிழர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்த இலைகளின் அடையாளம் இது’ என புது விளக்கம் சொன்னார் செந்தில்பாலாஜி.
உங்க Favourite Celebrities பத்தின 1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!
கரூரில் ஒன்றிரண்டு தொகுதிகளில் மட்டுமே தி.மு.க வெற்றி பெறுவது வழக்கம். ஆனால், 2021 தேர்தலில் கரூரில் நான்கு தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெற்றது. இதன்மூலம் தனது செலவில் 4 தொகுதிகளிலும் தி.மு.க-வை வெற்றி பெற வைக்கிறேன் என்ற அவரது வாக்குறிதியை நிறைவேற்றினார்.
அதோடு, தி.மு.க அமைச்சரவையிலும் செந்தில் பாலாஜிக்கு சீட் உறுதியானது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டது. போயஸ் கார்டனில் எப்படி செந்தில்பாலாஜிக்கு நல்ல பெயர் கிடைத்தோ… அதே போல, மு.க.ஸ்டாலின், உதய நிதி குடும்பதிலும் செந்தில் பாலாஜிக்கு நல்ல பெயர்.
செந்தில் பாலாஜி பற்றி இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை Tamilnadunow Youtube Channel பார்த்து தெரிஞ்சுக்கோங்க!Link