துபாயில் நடந்த ஐஃபா விருது விழாவில் மற்ற மொழி கலைஞர்களை புறக்கணிக்கும் விதமாக விழா முழுக்க இந்தியிலேயே நடைபெற்றுவந்தது. அப்போது சிறந்த நடிகருக்கான விருதை வழங்க ஏ.ஆர்.ரஹ்மானை அழைக்க அவரும் மேடையேறி வந்தார். மேடையில், தூய தமிழில் ‘சிறந்த நடிகருக்கான விருது திரு ரன்பீர் கபூர் அவர்களுக்கு’ என வாசிக்க ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ந்தது.
ஏ.ஆர்.ரஹ்மான் சொந்தமாக தயாரித்த ‘99 ஸாங்க்ஸ்’ படத் தமிழ் பதிப்பின் ஆடியோ லாஞ்ச் சென்னையில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சித் தொகுத்து வழங்கிய பெண், படத்தின் ஹீரோவை ஹிந்தியில் பேசி வரவேற்க... ஏ.ஆர்.ரஹ்மான், ‘ஹிந்தி?’ என ஒரேயொரு வார்த்தையை கேள்விக்குறியுடன் சேர்த்துக் கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கிவிட அரங்கரமே ஆர்ப்பரித்தது.
மும்பையில் நடந்த ஒரு சினிமா விழா. அதில் பேசிய சல்மான்கான், ரஹ்மானைக் கிண்டலடிக்கும் நோக்கில், ‘ரொம்ப ஆவரேஜான மியூசிக் டைரக்டர்தான் நம்ம ரஹ்மான். ஆனா ஆஸ்கர் வாங்கிட்டாரு’ என சொல்லி சிரித்துவிட்டு ஏ.ஆர்.ரஹ்மானைப் பார்த்து, ‘உண்மைதான..?’ எனக் கேட்க, அவரும் ‘ஆமா உண்மைதான்’ என்றார். உடனே, ரஹ்மானுக்கு, சல்மான் கைகொடுக்க... ரஹ்மான் தனது பாக்கெட்டில் இருந்து கைகளை எடுக்காமல் இருந்தார். உடனே சுதாரித்துக்கொண்ட சல்மான் கான், அவரது இடது கையை கோட்டிலிருந்து எடுத்து பிடித்துக்கொள்ள, ஏ.ஆர்.ரஹ்மான் பெரிதாக ரியாக்ட் எதுவும் செய்யாமல் தன்னுடைய கையை விடுவித்து கோட்டிலேயே துடைத்துக்கொண்டு மீண்டும் பாக்கெட்டில் வைத்துக்கொள்வார்.