வெல்லம் உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன - 6 பாயிண்டுகள்!

சர்க்கரைக்கு சிறந்த மாற்றாகக் கருதப்படும் வெல்லத்தை உங்களின் தினசரி உணவில் சேர்ப்பதால் உடல் நலனுக்கு எத்தனையோ பலன்கள் கிட்டுகின்றன. வெல்லத்தால் கிடைக்கும் 6 பலன்களைப் பற்றிதான் நாம இப்போ தெரிஞ்சுக்கப் போறோம்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

நோயெதிர்ப்பு சக்தி கரும்புச் சாறிலிருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் வெல்லத்தில் ஆன்டி-ஆக்ஸிடெண்டுகள், கனிமங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை இயற்கையாகவே நமது நேயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வல்லமை கொண்டது. 

சுவாசக் கோளாறுக்கு அருமருந்து உங்கள் உணவில் அடிக்கடி வெல்லத்தைச் சேர்த்துக் கொள்வதன்மூலம் சுவாசக் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும், சளி, இருமல் போன்றவற்றின் அறிகுறிகளுக்கு எதிராகவும் சிறப்பாகச் செயல்படக் கூடியது. 

இயற்கை ரத்த சுத்திகரிப்பான் தினசரி வெல்லத்தை உட்கொள்வதால் உடலில் இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும். அதேபோல், இயற்கையான ரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படும்.

மூட்டு வலி வெல்லத்தில் இருக்கும் சிலவகை சத்துகள் மூட்டு வலியைக் குறைப்பதோடு, ஆர்தரைடஸ் ஏற்படுவதிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும் திறன் பெற்றது. 

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

ரத்த அழுத்தம் வெல்லத்தில் அதிகமாக இருக்கும் சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதில் முக்கியமான பங்காற்றுபவை. 

மலச்சிக்கல் சிறிய அளவில் வெல்லத்தை எடுத்துக் கொண்டாலும், அது நமது செரிமானத்துக்கு உதவும் என்சைம்களை ஆக்டிவேட் செய்யும். இதனால், நமது ஜீரண சக்தி அதிகரித்து மலச்சிக்கல் ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கும்.