’கிங்’ கோலி - 6 இண்ட்ரஸ்டிங் தகவல்கள்!

விராட் கோலி பத்தின சில இண்ட்ரஸ்டிங்கான விஷயங்களைத்தான் நாம பார்க்கப்போறோம்

2018-க்குப் விராட் கோலி வெஜிடேரியனுக்கு முழுசா மாறக் காரணம் அத்லெட்ஸ், அவங்களோட லைஃப்ஸ்டைல் பத்தி நெட்ஃபிளி்ஸ்ல வெளியான 'Game Changers' டாக்குமெண்டரி.

அவரோட செல்லப் பெயர் 'Cheeku'. sampak காமிக் புக்ல வர்ற Cheeku முயலைப் போலவே விராட் கோலியோட காதுகளும் பெருசா இருந்ததால, சின்ன வயசு கோச் இப்படி அவரைக் கூப்பிடத் தொடங்குனாராம்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

இதுவரைக்கு ஒண்டே மேட்ச்கள்ல அவர் அடிச்சிருக்க 43 சதங்கள்ல, 26 சேஸிங்ல ஸ்கோர் பண்ணது. அதுல, வெறும் 7 மேட்ச்கள் மட்டுமே இந்தியாவால வெற்றிபெற முடியாமப் போயிருக்கு.

விராட் கோலி வந்ததுக்கு அப்புறம் இந்தியன் டீமோட கல்ச்சரே மொத்தமா மாறியிருக்கு. கோலி தலைமையின் கீழ் ஃபீட்னெஸ் முக்கியமான அம்சமாவே மாறிடுச்சு.

ஹாங்காங் மேட்சுக்கு முன்னாடி, இந்தியன் டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்த அந்த நாட்டு வீரர்கள், `Thank you for Inspiring a generation'னு நெகிழ்ச்சியா டிஷர்ட்ல வாழ்த்து வாசகம் போட்டு விராட் கோலிக்கு கிஃப்ட் பண்ணிருந்தாங்க.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை டி20 மேட்சில் சதமடித்து, தனது 71-வது செஞ்சுரியைப் பதிவு செய்தார் கோலி. 2019 நவம்பருக்குப் பிறகு கிட்டத்தட்ட 1020 நாட்களுக்குப் பிறகு அவரது முதல் சர்வதேச சதம் இது.