`கேப்டன் கூல்’ தோனி - 7 சுவாரஸ்யங்கள்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று 40-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தோனி குறித்த 7 சுவாரஸ்ய தகவல்களைத் தெரிஞ்சுக்கலாமா?

சிறுவயதில் தோனியின்  முதல் லவ் ஃபுட்பால்தான். கோல்கீப்பிங்தான் விக்கெட் கீப்பிங்காக மாறியது.

இந்திய அணிக்காக அறிமுகமாகி 3 ஆண்டுகளில் முதல் டி20  உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக உயர்ந்தார். 

தோனி, தனது ஃபேவரைட் ஸ்டாரான ஜான் ஆப்ரகாமுடன் சேர்ந்து 2010-ல் Hook ya Crook படத்தில் நடித்தார். படம் ரிலீஸாகவில்லை. 

கிஷோர் குமார் பாடல்களின் தீவிர ரசிகர். ரிட்டையர்மெண்ட் வீடியோவில் கூட பின்னணியில் அவரின் பாடல் ஒலிப்பதைக் கேட்கலாம். 

பைக்குகளின் காதலரான தோனியின் கலெக்‌ஷனின்  23-க்கும் மேற்பட்ட பைக்குகள் இருக்கின்றன. அதில், ரூ.29 லட்சம் விலையுள்ள  H2R-ம் ஒன்று.

தோனி தலைமையில் இந்திய அணி 27 டெஸ்ட், 163 ஒருநாள் போட்டிகளில் வென்றிருக்கிறது. 

கோரக்பூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கலெக்டர் டு டிராஃபி கலெக்டரான தோனியின் வாழ்வு `MS Dhoni - Untold Story' என்ற பெயரில் படமானது.