நடிகர் விஜய் பற்றிய 7 சுவாரஸ்ய தகவல்கள்!

1984-88 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக தந்தை எஸ்.ஏ.சி இயக்கிய 6 படங்களில் நடித்திருக்கிறார்.

ரஜினியின் தீவிர ரசிகரான விஜய், நிறைய சந்தர்ப்பங்களில் பலருக்கும் உதவுவதை வழக்கமாக வைத்திருப்பவர்.

பிரபுதேவா பாலிவுட்டில் இயக்கிய ரவுடி ரத்தோர் படத்தில் அக்‌ஷய்குமாருடன் ஒரு பாடலில் ஆடியிருப்பார்.

அல்லு அர்ஜூனைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கேரளாவில் நேரடிப் படங்களோடு போட்டிபோடும் அளவுக்கு ரசிகர் படை விஜய்க்கு இருக்கிறது.

அமெரிக்காவில் டாம் குரூஸின் பீச் ஹவுஸைப் பார்த்து வியந்த விஜய், அதே மாடலில் தனது நீலாங்கரை வீட்டையும் டிசைன் செய்திருக்கிறார்.

மனைவி சங்கீதாவின் பெயரின் முதல் 3 எழுத்துகள், தனது பெயரின் கடைசி 3 எழுத்துகளை எடுத்து மகனுக்கு சஞ்சய் (Sanjay) என்று பெயரிட்டார்.

தமிழ் சினிமாவில் 20-க்கும் மேற்பட்ட இயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.