பிரதமர் மோடி  - 7 சுவாரஸ்ய தகவல்கள்!

இந்தியா சுதந்திரமடைந்து 3 ஆண்டுகள் கழித்து 1950ம் ஆண்டு செப்டம்பர் 17-ல் குஜராத்தின் வடக்குப் பகுதியில் இருக்கும் மெஸானா மாவட்டத்திலுள்ள வத்நகர் கிராமத்தில் பிறந்தார்.

தாமோதர்தாஸ் மோடி - ஹிராபா மோடி தம்பதியின் 6 குழந்தைகளில் மூன்றாவது குழந்தை நரேந்திர மோடி.

ராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது மோடியின் சிறுவயது கனவுகளில் ஒன்று. இதற்காக, அருகிலிருந்த ஜாம்நகர் சைனிக் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், பொருளாதார வசதி இடமளிக்கவில்லை.

Narendramodi.in இணையதளத் தகவல்படி, சிறுவயதில் மோடியின் குடும்பம் 40X12 அடி அளவுள்ள வீட்டில் வாழ்ந்திருக்கிறார்கள். அவரது தந்தை அருகிலிருக்கும் ரயில் நிலையத்தில் டீ விற்கும் வேலை செய்து வந்திருக்கிறார்.

தினசரி எவ்வளவு நேரம் தூங்குவீர்கள் என்ற கேள்விக்கு 2012-ல் மோடி அளித்த பதில், ``நான் குறைந்த நேரமே தூங்குவேன். யோகா, பிராணயாமா, மூச்சுப் பயிற்சி போன்றவை புத்துணர்ச்சியுடன் என்னை வைத்திருக்க உதவுகின்றன’ என்றார்.

2001 - 2014வரை குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி, 2012 தேர்தலில் நாட்டிலேயே முதல்முறையாக ஹோலோகிராம் உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பிரசாரம் செய்தார்.

சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்து பிரதமரான முதல் நபர் நரேந்திர மோடி. கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் 14-வது பிரதமராகப் பொறுப்பேற்றார்.

மோடி பிரதமராகப் பதவியேற்ற முதல் 3 ஆண்டுகளில் காலாவதியான 1,200 சட்டங்களை ரத்து செய்தார். அதற்கு முன்பான 64 ஆண்டுகளில் இவ்வாறான 1,301 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

பிரதமராக 7 ஆண்டுகள் நிறைவு… மோடி பற்றிய 7 சுவாரஸ்யத் தகவல்கள்!

Read More