ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே ஃபைன் போக்குவரத்து விதிமீறலுக்காக உங்களுக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே அபராதம் விதிக்க முடியும். ஒருமுறை ஃபைன் செலுத்திவிட்டால், அந்த நாள் முழுவதும் அதே காரணத்துக்காக உங்களுக்கு அபராதம் விதிக்க முடியாது. இதைப் பயன்படுத்தி விலக்கு தேடாமல், உரிய போக்குவரத்து விதிகளைக் கடைபிடிப்பது நல்லது.
தத்தெடுப்பு இந்து தத்தெடுப்புச் சட்டம் 1956-ன் படி உங்களுக்கு மகனோ, அல்லது மகனுக்கு மகனோ இருந்தால், ஆண் குழந்தையை நீங்கள் தத்தெடுக்க முடியாது. இதே நடைமுறைதான் மகள்களுக்கும். அதேபோல், தத்தெடுப்பவருக்கும் தத்தெடுக்கப்படும் குழந்தைக்கும் இடையில் 21 வயது வித்தியாச இடைவெளி இருக்க வேண்டும் என்கிறது சட்டம்.
கர்ப்பிணி எந்தவொரு நிறுவனமும் கர்ப்பிணிகளை வேலையைவிட்டு நீக்க முடியாது. இதற்காக அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். 10 பேருக்கு அதிகமான ஊழியர்கள் கொண்ட நிறுவனத்தில் பெண்களுக்கு 84 நாட்கள் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு எடுக்க உரிமை உண்டு என்கிறது 1961ம் ஆண்டு மகப்பேறு நன்மைச் சட்டம்.