எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞர் புலமைப்பித்தன் - 7 தகவல்கள்!
கோவை பள்ளிபாளையத்தில் 1935 அக்டோபர்
6-ல் பிறந்தவர். இயற்பெயர் ராமசாமி.
12 ஆண்டுகள் தமிழாசிரியராக சென்னை, கோவை, நெல்லை ஆகிய இடங்களில் பணியாற்றியவர்.
1968-ல் எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தின் `நான் யார்’ பாடல் மூலம் வெளிச்சம் பெற்றார்.
அடிமைப்பெண் படத்தில் இவர் எழுதிய `ஆயிரம் நிலவே வா’ பாடல் இவரை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றது.
1978-ல் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட இவர், அந்த அவையின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தவர்.
இவரின் `பாவேந்தர் பிள்ளைத்தமிழ்” புத்தகம், சென்னை பல்கலைக்கழக எம்.ஏ. வகுப்பில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது.
புலமைப்பித்தன் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதினைப் பெற்றவர். மேலும் நான்கு முறை தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதினைப் பெற்றவர்.
Professor ரசிகர்களே உங்களுக்கு ஏமாற்றமே! – `Money Heist’ சீசன் 5 பார்க்கலாமா… வேண்டாமா?!
Read More