'ஓ க்யூட்டி நீ ஸ்வீட்டி' நடிகை பூஜா ஹெக்டே பற்றிய இந்த 7 விஷயங்கள் தெரியுமா?

கார்நாடக குடும்பத்தில் பிறந்த பூஜா, பின்னர் மும்பைக்கு வந்து அங்கே இருக்கும் எம்.எம்.கே கல்லூரியில் தனது இளங்கலை பட்டத்தை பெற்றவர். ஹிந்தி, மாரத்தி மற்றும் ஆங்கில மொழிகளை சரளமாக பேசுவார்.

2010 - ஆம் ஆண்டு 'மிஸ் யூனிவர்ஸ் இந்தியா' என்ற அழகு போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்த பின்னர் மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கினர்.

தமிழில் இயக்குநர் மிஷ்கின் இயக்கிய சூப்பர் ஹீரோ படமான "முகமூடி" படத்தில் 2012- ஆம் ஆண்டு ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகமானார்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

தெலுங்கு திரையுலகில் 2014- ஆம் ஆண்டு  'ஒக்க லைலா கோசம்' என்ற படத்தில் நடித்து, தெலுங்கு சினிமா ரசிகர் இடையில் கவனத்தை ஈர்த்தார்.

இந்த படம் நடிச்சு முடிச்ச பிறகு வாய்ப்பு இல்லாம இருந்த அப்போ ஒரு ஸ்கூட்டி விளம்பரத்தில் நடிச்சு இருக்காங்க, அது மூலமாக தான் பாலிவுட்ல 2016-ஆம் ஆண்டு "மோஹன் ஜோ தாரோ" படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சு இருக்கு.

சமீபத்துல இவங்க நடிச்ச பீஸ்ட் படத்தில் அவங்க அசத்தல் நடனத்தை வெளிப்படுத்தி, அந்த பாடல் யூ-டியூப்ல 482 மில்லியன் வியூஸை கடந்து இன்னைக்கும் நின்னு விளையாடிட்டு இருக்கு.

தெலுங்கு சினிமாவில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ்னு டாப் ஹீரோஸ் கூடவும், தமிழ்ல தளபதி விஜய்யோட நடிச்சு இப்போ ரசிகர் மத்தியில் ஒரு நீங்கா இடம் பிடிச்சுட்டாங்க.