`மெடிட்டேஷன் பண்றது ரொம்ப நல்லது!’ - மிர்ச்சி சிவாவின் டாப் 7 Thug Life மொமன்ட்ஸ்

தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களையும் கலாய்க்கிற ஒரு நடிகர் இருக்காருனா அவர், மிர்ச்சி சிவாதான். அவர் மேடையில் பல தக் லைஃப் சம்பவங்களை செய்துள்ளார். அவற்றில் சில தக் லைஃப் மொமன்ட்கள் இங்கே...

லண்டன், ஸ்காட்லாந்துனு நிறைய நாட்டுக்கு போய்ருக்கேன். அங்க தமிழ் மக்களை பார்க்கும்போது, `நல்லாருக்கீங்களா? உங்களைப் பார்த்ததுல சந்தோஷம். கண்டிப்பா வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போங்க’னு சொல்லுவாங்க. ஆனால், வீட்டு அட்ரஸ் தரமாட்டாங்க!

இந்த நிகழ்ச்சில நான் தமிழ்ல பேசப்போறேன். அவங்க இங்கிலீஷ்ல பேசுவாங்க. ஏன்னா, நான் இங்கிலீஷ்ல பேசுனா உங்களுக்கு புரியாது. அவங்க தமிழ்ல பேசுனா அவங்களுக்கே புரியாது!

சிம்பு to Mirchi Siva : 100 பொண்ண லவ் பண்றது பெரிய விஷயம் இல்லை. ஒரு பொண்ணை நூறு விதமா லவ் பண்றதுதான் பெரிய விஷயம். Mirchi Siva To Co anchor: உங்களுக்கு எதாவது புரிஞ்சுதா? That Co anchor: No Mirchi Siva To Co anchor: புரியலை? You are blessed.

சிம்பு to Mirchi Siva: Futureல என்ன நடக்கப்போகுதுனு தெரியணுமா? தெரிஞ்சா வாழ்க்கைல சுவாரஸ்யமே இருக்காது சார். Siva: ப்பா... எல்லாத்துக்குமே பஞ்ச் டயலாக். சாப்டீங்களா? பஞ்ச் டயலாக். கை கழுவுநீங்களா? பஞ்ச் டயலாக்.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

நிறைய அவார்ட் ஃபங்ஷன் நான் ஹோஸ்ட் பண்ணியிருக்கேன். ஒரு அவார்ட்ல மக்கள் நிறைய பேர் ஆடிட்டோரியம்ல உட்கார்ந்து இருந்தாங்க. திரும்பி பார்த்தா யாரையும் காணும். என்னனு பார்த்தா எல்லாரும் ஸ்டேஜ்க்கு வந்துட்டாங்க.

தமிழ் படத்துக்காக எனக்கு அவார்ட் கொடுத்துட்டா, ஆல்மோஸ்ட் எல்லாரையும் கவர் பண்ண மாதிரினு பிளான் பண்ணிட்டாங்க.

Anchor:  தமிழ் படம் போஸ்டர்ல வந்த மாதிரி நிறைய கதாபாத்திரங்கள் ஏற்று நடிச்சிருக்கீங்க. அவங்களுக்கும் இந்த அவார்டு சேர்த்து கொடுத்த மாதிரி. நீங்க என்ன நினைக்கிறீங்க? Siva: மெடிட்டேஷன் பண்றது ரொம்ப நல்லது. இந்தப் படம் மூலமா நாங்க சொல்ல வர்றது அதுதான்.

மிர்ச்சி சிவாவின் தக் லைஃப் மொமன்ட்களில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!