அஜித் பற்றிய 8 சுவாரஸ்ய தகவல்கள்!

#LesserKnownFacts

தனது வீடு, அலுவலகங்களின் இன்டீரியரை வடிவமைப்பதில் அலாதி பிரியம் உண்டு.

ஓய்வு நேரங்களில் போட்டோகிராஃபி, ஓவியம் மற்றும் சமையல் என மற்ற விஷயங்களில் ஈடுபடுவார் தல.

காரில் சென்றுகொண்டிருக்கும்போது ரசிகர் எவரேனும் டூவீலரில் ஹெல்மெட் இல்லாமல் அவரைச் சந்தித்து பேச முயன்றால், அவர்களுக்கு ஹெல்மெட் வாங்கிக் கொடுத்து அணியச் சொன்ன சம்பவங்களும் நடந்திருக்கின்றன. 

மாலை ஆறு மணிக்கு மேல் அஜித் ஒருவருக்கு போன் செய்கிறார் என்றால், `உங்களிடம் பேச இது சரியான நேரம்தானா?’ என்ற கேள்வியுடனே பேசத் தொடங்குவார்.

ஒரு படம் தொடங்கிய முதல் நாளில் இருந்து டப்பிங் பணிகள் முடியும்  வரை ஒரே போன் நம்பரைப் பயன்படுத்துவாராம். படம் முடிந்ததும் நம்பரை மாற்றிவிடுவது அஜித்தின் வழக்கம்.

வி.இஸட்.துரை, எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், சரவண சுப்பையா என பல முக்கிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை அஜித்துக்கு உண்டு.

தன்னைவிட வயதில் மூத்த நடிகர்களோடு ஒரு சீன் நடிக்க நேர்ந்தால், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இயக்குநர்களிடம் சொல்லி அவர்களிடம் முதலில் அந்தக் காட்சியை விளக்கச் சொல்வாராம்.

அஜித்துக்கு பிடித்தமான மற்றொரு பொழுதுபோக்கு மினியேச்சர் ஹெல்மெட், ஸ்டாம்புகள் சேகரிப்பது. இதற்கென  தனது வீட்டில் பெரிய கலெக்‌ஷனே வைத்திருக்கிறாராம்.