தமிழ் சினிமாவில் ஆன் ஸ்கிரீனில் விஜய் பல தக் லைஃப் சம்பவங்களை செய்துள்ளார். அதேபோல, ஆஃப் ஸ்கிரீனிலும் சில தக் லைஃப் சம்பவங்களை செய்துள்ளார். அவற்றில் சில இங்கே...
``சினிமாவுக்கு வந்ததால என்னலாம் இழந்துருக்கீங்க?’’ - விஜய் ரசிகை
``சினிமாவுக்கு வந்ததால என்னால படிக்க முடியாமல் போச்சு; ஃபேமிலியோட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாம போச்சு... இப்படிலாம் நான் சொல்லுவேன்னு எதிர்பார்த்தீங்கள்ல” - விஜய்
``குளிரான இடங்களுக்குலாம் போய் ஆடும்போது ஹீரோக்கள் ஜீன்ஸ், ஜாக்கெட்லாம் போட்டு ஆடுறீங்க. ஆனால், ஹீரோயின்ஸ்க்கு வெறும் பிளௌஸ், சாரி மட்டும் கொடுக்குறீங்க. ஏன் இப்படி?” - தொகுப்பாளர்
``பின்ன என்னங்க நாங்களா சாரி கட்ட முடியும்” - விஜய்
``டைரக்டர் விஜய், அமலாபால், ஜி.வி.பிரகாஷ் - இதுல யார் உங்களோட க்ளோஸ் ஃப்ரெண்ட்?” - தொகுப்பாளர்
``அது தெரிஞ்சு நீ இப்போ என்ன பண்ணப்போற” - விஜய்
``பொண்ணுங்க இருக்காங்கள்ல... If you wanted to change one thing about them. what would that be? இதை கொஞ்சம் தமிழ்ல சொல்லுங்க!” - நடிகை அசின்
``எனக்கென்ன இங்கிலீஷ் புரியாதா?” - விஜய்
``என்னோட ஷோவை என்னைக்காவது ஒருநாள் பார்த்துட்டு. ஆடம்ஸ் மாதிரி ஒரு படத்துல பண்ணனும்னு என்னைக்காவது நினைச்சிருக்கீங்களா?” - தொகுப்பாளர்
``இல்ல.. இதுவரைக்கும் இல்ல... இனிமேலும் இல்ல” - விஜய்
``ஷூட்டிங் ஸ்பாட்ல மக்கள்ல இருந்து விலகி பிளாங்க்கா ஒரு இடத்தை பார்த்துட்டே இருப்பீங்க. அப்போ என்ன நினைப்பீங்க?” - ஏ.ஆர்.முருகதாஸ்
``என்ன நினைப்பேன்... உட்கார்ந்து தூங்கிட்டு இருந்துருப்பேன்!” - விஜய்