தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் முக்கியமான இடம் நடிகர் விஜய்க்கு எப்போதுமே உண்டு. அதற்குக் காரணம் அவருக்கு இருக்கும் மிகப்பெரிய ஃபேன் பேஸ். டான்ஸ், காமெடி, ஃபைட் என விஜய்யின் ஒவ்வொரு ஸ்கிரீன் பிரசன்ஸுமே அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். சமீபத்தில் வெளியாகியிருக்கும் `பீஸ்ட்’ அரபிக்குத்து பாடலில் கூட அவரது டான்ஸுக்கு ஃபயர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.