'எம்.ஜி.ஆர் முதல் சிம்பு வரை..’ - கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற கோலிவுட் நடிகர்கள்!

சினிமாத் துறையில் ஆற்றிய பங்கு மற்றும் மக்கள் நலனுக்காக செய்த உதவிகள் உள்ளிட்ட காரணங்களுக்காகப் பல்வேறு காலகட்டங்களில் தமிழ் சினிமா நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கி கௌரவித்திருக்கின்றன. அப்படி, கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் சினிமா நடிகர்களைப் பற்றிதான் நாம இப்போ தெரிஞ்சுக்கப் போறோம். 

எம்.ஜி.ஆர் நடிகரும் தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆருக்கு அமெரிக்காவின் அரிசோனாவில் இருக்கும் உலகப் பல்கலைக்கழகம் 1974-ல் டாக்டர் பட்டம் வழங்கியது. அதேபோல், சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு 1987-ல் கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது.

சிவாஜி கணேசன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த 1986-ல் கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

விஜயகாந்த் `புரட்சிக் கலைஞர்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜயகாந்துக்கு அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருக்கும்   International Institute of Church Management கடந்த 2011-ல் கௌரவ முனைவர் பட்டமளித்தது.

சின்னி ஜெயந்த் நடிப்பு, மிமிக்ரி மற்றும் நாடகக் கலைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக நடிகர் சின்னி ஜெயந்துக்கு The open international university for alternative medicine பல்கலைக்கழகம் கடந்த 2013-ல் கௌரவ டாக்டர் பட்டத்தைக் கொடுத்தது.

கமல்ஹாசன் திரைத்துறை மூலம் ஆற்றிய சேவைகளுக்காக சத்தியபாமா பல்கலைக்கழகம் கடந்த 2005-ல் நடிகர் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் அளித்தது. கமல்ஹாசனுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் டாக்டர் பட்டத்தைக் கொடுத்தார்.

நாசர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக கலைத்துறைக்கு ஆற்றிய சேவைகளுக்காக நடிகர் நாசருக்கு சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டமளித்து கௌரவித்தது.

பிரபு நடிகராக திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக நடிகர் பிரபுவுக்கு சத்யபாமா பல்கலைக்கழகம், கடந்த 2011-ல் கௌரவ முனைவர் பட்டமளித்து கௌரவப்படுத்தியது.

விஜய் நடிகர் விஜய்-க்கு, திரைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காகவும் சமூக சேவைகளுக்காகவும் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கடந்த 2007-ல் டாக்டர் பட்டம் அளித்தது.

விக்ரம் இத்தாலியின் புகழ்பெற்ற மிலன் நகரில் அமைந்திருக்கும் Università Popolare degli Studi di Milano பல்கலைக்கழகம் நடிகர் விக்ரமுக்கு 2011-ல் கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது.

விவேக் சின்னக் கலைவாணர் என்று புகழப்படும் காமெடி நடிகர் விவேக்கை சத்யபாமா பல்கலைக்கழகம் கடந்த 2015-ல் கௌரவ டாக்டர் பட்டமளித்து கௌரவப்படுத்தியது.

சிம்பு நடிகர் சிம்புவுக்கு 2022 ஜனவரியில் கௌரவ டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழகம் அளித்தது. தமிழ் சினிமாவில் தனித்த சிறப்புமிக்க அடையாளத்தோடு விளங்கி வருவதற்காக இந்தப் பட்டத்தை அளிப்பதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்தது.