அமாவாசைங்க, அதனால நாளு நல்லா இருக்குன்னு மனு கொடுக்கறதுக்கு வந்திருக்கனுங். பட் மை நேம் இஸ் நாகராஜ சோழன் எம்.ஏ., சன் ஆஃப் ராஜேந்திர சோழன், கிரான்ட் சன் ஆஃப் ராஜராஜ சோழன், தஞ்சாவூர். அந்த ராஜ பரம்பரைல வந்தவங்க தாங்க நானும். அந்த பரம்பரைல வந்த கடைசி இளவரசன் நான்தாங்க. அந்த காலத்துல எங்க தாத்தா கூட்டுன ராஜ சபைக்கு மந்திரிங்க எல்லாம் வந்துட்டு இருந்தாங்க. இப்ப மந்திரி சபைக்கு நான் போக வேண்டியதா இருக்குதுங்க.
``சாதியாவும் மதமாவும் நம்ம சனங்க பிரிஞ்சு கிடக்குற வரைக்கும் நம்மள மாதிரி அரசியல்வாதிங்க குதிரை ஏறிட்டே இருக்க வேண்டியதுதான். ``அப்ப நம்மள மாதிரி ஆளுங்க சந்தோசமா இருக்கறதுக்குத் தான் சாதியவே கண்டுபிடிச்சிருப்பாங்கன்னு நினைக்குறேன். அன்னைக்கு அமெரிக்காவ கொலம்பஸ் கண்டுபிடிச்சான்ன சொன்ன… இந்த சாதிக் கருமாந்தரத்த யாரு கண்டுபிடிச்சவன்?” ``மந்திரம் ஓதுறவனுங்க கண்டுபிடிச்சாங்க… மந்திரிமாருங்க அதை கெட்டியா புடிச்சிட்டானுங்க” ``ஓ அப்ப இந்த சாதிக் கருமாந்தரத்த ஒழிச்சிட்டம்னா ஜனங்க நிம்மதியா இருப்பாங்க போல இருக்குதே” ``ஜனங்க நிம்மதியா இருப்பாங்க, நாம தான் சோத்துக்கு சிங்கி அடிக்கணும்!”