மயில் வடிவ அம்பாள்; கௌரிதாண்டவ கோலம்  மாயூரநாதர் கோயிலின் சிறப்புகள்!

அன்னை பார்வதி மயில் வடிவில் வழிபட்ட திருத்தலம், இறைவன் ஆண் மயிலாகி கௌரிதாண்டவம் ஆடிய தலம், துலா நீராடல் மூலம் பாவம் நீக்கும் தலம் என பல்வேறு சிறப்புகளை கொண்டது  மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில்.

அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில் அனவித்யாம்பிகை என்ற பெயரில் லிங்கம் ஒன்று இருக்கிறது. இந்த லிங்கத்துக்கு சிவப்பு நிற சேலைதான் கட்டுகின்றனர். ஆணும், பெண்ணும் சமம் என்பதை இந்த வடிவம் உணர்த்துவதாகச் சொல்கிறார்கள்.

துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்களும் இருக்கின்றனர். துர்க்கையின் இந்த வடிவத்தை காண்பது அரிது

இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப்பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்துக்குப் பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல விநாயகர் அகத்திய விநாயகர் எனப்படுகிறார்.

சிவன் மயில் உருவில் வந்து அருள்புரிந்ததால், மாயூரநாதர் என்று அழைகப்படுகிறார். மாயூரநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால் இந்த ஊர் மயிலாடுதுறை எனப் அழைக்கப்படுகிறது.

இங்கு சுவாமி லிங்கமாக இருக்க, அருகில் அம்பாள் மயில் வடிவில் அவரை வழிபட்ட கோலத்தில் இருக்கிறாள். சுவாமி சந்நிதிக்கு பின்புறத்தில் உள்ள முருகனைக் குறித்து அருணகிரியார் பதிகம் பாடியிருக்கிறார்.

இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குவது விசேஷம். சிவனது கௌரி தாண்டவத்தை, ’மயூரதாண்டவம்’ என்றும் சொல்கிறார்கள். நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார்.

தன்னை நாடி வந்த மயிலைக் காத்தவள் என்பதால், ’அபயாம்பிகை’ என்று அம்பாள் அழைக்கப்படுகிறார். இவர் வலது கையில் கிளியுடன் உள்ளார்.

இந்தக் கோயில் பிரகாரத்தில் நவக்கிரக சந்நிதியில் உள்ள சனிபகவான், தலையில் அக்னியுடன் ’ஜுவாலை சனி’யாக இருக்கிறார்.