‘கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை!’ - அப்துல்கலாமின் அசத்தல் பொன்மொழிகள்

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.

ஒரு மெழுகுவர்த்தி மற்றொரு மெழுகுவர்த்திக்கு ஒளி கொடுப்பதால், அதற்கு இழப்பு ஒன்றும் இல்லை.

கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு.

கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டுமே காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதும் மண்டியிடுவதில்லை.

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே. அது உன்னை கொன்று விடும், கண்ணை திறந்து பார் அதை நீ வென்று விடலாம்.

நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.

சிந்திக்க தெறிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை.

உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே. ஏனென்றால், கையே இல்லாதவனுக்குகூட எதிர்காலம் உண்டு.

வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.