`நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்' - அறிஞர் அண்ணாவின் 10 பொன்மொழிகள்

எதிரிகள் தாக்கித்தாக்கித் தங்கள் வலுவை இழக்கட்டும்... நீங்கள் தாங்கித்தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவுசெய்த பிறகு, மனிதனிடம் வாதிடுவது என்பது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... இனி, நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது.

கட்டுப்பாடும் ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை, சாதாரணமானவைதான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடைபோட முடியும்.

வைரல் ஜொலிக்க வேண்டுமானால் சானைப் பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால், தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம், அதேபோல், நல்வாழ்வு பெறவேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கையுள்ளவர்களாக நடந்துகொண்டால் போதாது. தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கையுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும்.

பிறருக்குத் தேவைப்படும்போது, நல்லவர்களாகத் தெரியும் நாம்தான், அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாகிவிடுகிறோம்.

புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது; அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும்.

உங்கள் கருத்துக்கு மதிப்பு ஏற்பட வேண்டுமானால் மற்றவர் கருத்துக்கும் மதிப்புத் தர வேண்டும்.