எளிமைதான் நமது பண்பு. நிலை உயர உயர, எளிமையாக இருப்பதுதான் அந்தப் பண்பின் சிகரம்.
அறிவு எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தமிழன் தயாராக இருக்கிறான். ஆனால், இடம் உயர்ந்தது என்பதாலே அது அறிவுடையது என்ற தத்துவத்தைத் தமிழன் ஒப்புக்கொள்ள மாட்டான். தமிழன் தான் சொன்னான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று.
தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், யாரையும் சுரண்டாமல், யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்.
வீட்டிற்கோர் புத்தகச் சாலை வேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை. அந்தத் தேவையை பூர்த்தி செய்ததானதும் முதல் இடம் புத்தகச் சாலைக்கே தரப்படவேண்டும்.
அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள். அந்த அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கும் ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள்.
நாம் யாருக்கும் மேலல்ல! யாரும் நமக்கு மேலோர் அல்ல! மனிதர் யாவரும் சரி நிகர் சமமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்?
பிறப்பால் ஆரியத்தை சேர்ந்த ஒருவரும் உணர்வால் திராவிடர் ஆகலாம். ஆரியம் பிறப்பில் இல்லை. அது கருத்தில் இருக்கிறது. திராவிடராய்ப் பிறந்து சாதியத்தை நெஞ்சில் சுமப்போரும் ஆரியரே!