`நாயோட போச்சேனு எனக்கு ஆறுதலா இருக்கு’ - `அசுரன்’ படத்தின் 7 `நச்’ டயலாக்குகள்!
``என்ன அடிக்கறதுல அவங்களுக்கு என்ன பெருமை மாமா? அவன் என் தலையில செருப்பை வச்சி என்ன அடிச்சப்ப கூட வலிக்கல மாமா ; ஆனா, வேடிக்கை பார்த்த யாருமே, `ஏன் இந்த புள்ளைய அடிக்கற’னு எதுவும் கேக்கல, ஏன் மாமா?”
``புள்ளை உயிர் இல்லாம, வெறும் கௌரவத்த வச்சு என்ன செய்யுறதாம்..”
``காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது சிதம்பரம்!”
``படி, அதிகாரத்துக்கு வா, அவன் உனக்கு செஞ்சத, நீ எவனுக்கு செய்யாத..”
``நாய் போச்சேன்னு அவனுக்கு கஷ்டமா இருக்கு… நாயோட போச்சேனு எனக்கு ஆறுதலா இருக்கு”
``போட்டோ புடிச்சா ஆயுசு குறைஞ்சிடும்னு, ஒரு போட்டோ கூட எடுக்காம, இப்போ அவன் நினைப்பா ஒரு போட்டோ கூட இல்லையே… புள்ள முகத்த மறந்து, கடந்து போற வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது..”