`குழந்தைகள் கை காட்டாத கூட்ஸ் ரயில்!' - அசத்தலான 7 ரயில் கவிதைகள்

ஆடுகளற்ற ரயிலடியில் ஊமையாகிறது ரயில் ஓசை. - கவிஜி

யார் கொடுத்தது ரயிலுக்கு மட்டும் புகை பிடிக்க அனுமதி! - வேலாயுதம்

அபாயங்கள் அத்தனையும் வெளியே இருக்க உள்ளே தொங்கிக்கொண்டிருக்கிறது அபாயச் சங்கிலி. - யுகபாரதி

குழந்தைகள் கை காட்டாத கூட்ஸ் ரயிலில் இருந்து கொடியசைத்துப் போகிறான் கடைசிப் பெட்டியில் கார்டு. - நா.முத்துக்குமார்

கடைசி ரயிலையும் தவற விட்டது போலிருக்கும் பிரிந்து போனவர்களின் சாயல். - சாய் பிரியதர்ஷினி

உண்ட பின்பும் நாவில் ஒட்டிய சுவையாய் பயணம் முடிந்த பிறகும் எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது சில ரயில் பயண நட்புகளை. - நிலா

சகல ஜீவபட்சிகளையும் சமமாகவே பாவிக்கும் ரயிலுக்குத் தெரியுமா தனக்குக் கீழேயும் சுழல்வது சக்கரமில்லை சாதியென்று. - யுகபாரதி

ரஜினி நடிக்க அட்லீ இயக்கவிருந்த `காப்பான்’ கதை… சுவாரஸ்ய பின்னணி!

Read More