தினசரி உணவில் மீன்சேர்த்துக் கொண்டால் இத்தனை நன்மைகளா?!
நமது உணவில் மீனை சேர்த்துக் கொள்வதால் எத்தனையோ நன்மைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். முக்கியமான சிலவற்றைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
புரோட்டீன், வைட்டமின் டி போன்ற முக்கியமான சத்துகள் மீனில் அடங்கியிருக்கின்றன.
வாரத்தில் ஒருநாள் மீன் உணவை எடுத்துக்கொள்வது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கும்.
மீனில் செறிந்து காணப்படும் ஒமேகா - 3 சத்து மூளை மற்றும் கண் ஆரோக்கியத்தில் முக்கியமான பங்காற்றுகிறது.
கர்ப்பிணிகள் போதுமான அளவு ஒமேகா - 3 அடங்கிய உணவுகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேநேரம் மெர்க்குரி அடங்கியிருக்கும் மீன்களைத் தவிர்த்துவிட வேண்டும்.
மூளையின் எமோஷன்கள் மற்றும் நினைவுத் திறனைக் கட்டுப்படுத்தும் பகுதிகளின் ஆரோக்கியத்தில் மீன் முக்கியமான பங்காற்றுகிறது.
டைப் ஒன் டயபாடீஸ் உள்ளிட்ட நோயெதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படும் பல்வேறு நோய் பாதிப்புகளை மீன் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் குறைத்துக் கொள்ள முடியும்.
சிலவகை மீன்களை எடுத்துக்கொள்வது குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பைக் குறைக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
உங்கள் உடலின் மெட்டபாலிஸம் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது.
கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சையில் உதவுகிறது.
விளையாட்டு வீரர்கள், தங்கள் காயங்களில் இருந்து விரைவில் குணமடைவதில் முக்கியப் பங்காற்றுகிறது.