’செல்ஃப் டிரைவ் போறீங்களா?’ - இந்த 5 ரூட் ட்ரை பண்ணி பாருங்க!

செல்ஃப் டிரைவ் போணும்ன்றது பலரோட ஆசையா இருக்கும். அதுக்காக கார், பைக்னு எல்லாமே ரெடி பண்ணி வைச்சிருப்பாங்க. ஆனால், எந்த ரூட்ல போனால் நல்லா இருக்கும்னு அவங்களுக்கு தெரியாது. அவங்களுக்கான சில ஐடியாக்கள் இதோ...

Bengaluru to Gokarna - சுமார் 500 கி.மீ தூரம். 10 மணி நேரம் டிராவல். இரண்டு பக்கம் இயற்கை காட்சிகள் நிரம்பியிருக்கும்.

Chennai to Munnar - சுமார் 600 கி.மீ தூரம். தேயிலை தோட்டங்கள், நீர் வீழ்ச்சிகள் அப்டினு போற வழில எஞ்சாய் பண்ண நிறைய விஷயங்கள் இருக்கு.

Kochi to Wayanad - சுமார் 280 கி.மீ தூரம். வெயில் காலத்துக்கு ஏற்ற இடம். மலைகளின் வழியாக இரண்டு பக்கமும் பச்சை நிறங்களை ரசித்தபடி செல்லலாம்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

Chennai to Yelagiri - சுமார் 230 கி.மீ தூரம். வீக் எண்ட்ல குயிக்கா ஒரு ட்ரிப் போகணும்னு நீங்க நினைச்சா இது கரெக்டா இருக்கும். வெதரும் உங்களுகு ஏற்ற வகையில் இருக்கும்.

Visakhapatnam to Araku Valley - சுமார் 115 கி.மீ தூரம். சுற்றி காடுகள். இந்த டிரிப் ரொம்பவே சின்னதா இருந்தாலும் பெஸ்ட் ரிப்பா இருக்கும்.

சரி... எந்த இடத்துக்கு போகலாம்னு பிளான் போடுறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!