`நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?' - படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் டாப் 6 கவிதைகள்!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. - வறுமையின் நிறம் சிவப்பு

பிறர் வாடப் பலசெயல்கள் செய்து, நரை கூடிக் கிழப்பருவம் எய்தி, கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும், பல வேடிக்கை மனிதரைப் போலே, நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? - மகாநதி

வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை பேருக்கொரு நிறம் ஆகும். - வறுமையின் நிறம் சிவப்பு

நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்; நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்; திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்; சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்; பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே, பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை. - காற்று வெளியிடை

சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு தன்னில் செழித்திடும் வையம்; ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம். - வறுமையின் நிறம் சிவப்பு

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம். - வறுமையின் நிறம் சிவப்பு

இன்னும் பல வரிகள் பல படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.பாரதியாரின் இந்த கவிதை வரிகளில் சில வரிகள் பல படங்களில் ரிப்பீட்டாக பயன்படுத்தப்பட்டிருக்கும். பாரதியாரின் வரிகள் பாடல்களாகவும் திரைப்படங்களில் வெளிவந்துள்ளன. இவற்றைத் தவிர அவரின் வரிகள் படத்தின் தலைப்புகளாகவும் வைக்கப்பட்டுள்ளன.