#Biggboss5 Tamil: பிக்பாஸ் போட்டியாளர்கள் - 18 பேர் 18 தகவல்கள்!

இசைவானி :` The Casteless Collective' மூலமா பிரபலமடைந்த சென்னையைச் சேர்ந்த இசைவானி, சமீபத்தில் `சார்பட்டா பரம்பரை’யில் பாடிய `வம்புல தும்புல’ பாடலும் செம ஹிட் ஆனது. இந்தியாவிலேயே முதல் பெண் கானா பாடகர் இவங்கதான்.

ராஜூ ஜெயமோகன்: கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி சீரியல்ல நடிச்ச ராஜூவுக்கு ஹீரோ ஆகணும்னு ஆசை. திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், நட்புனா என்னனு தெரியுமா படத்துல நடிச்சிருக்காரு. ஸ்கிரிப்ட் எழுதுறதுலயும் ராஜூவுக்கு இன்ட்ரஸ்ட் இருக்கு. விஜய்க்கு அண்ணாமலை மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் பண்ணனும்னு ஒரு இண்டர்வியூல சொல்லியிருக்காரு.

மதுமிதா : இலங்கைத் தமிழ் பெண்ணான மதுமிதா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஜெர்மனியில்தான். ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மதுமிதாவுக்கு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஃபேஷன் டிசைனராகவும் மாடலாகவும் இருக்கிறார்.

அபிஷேக் ராஜா: ஓப்பன் பண்ணா... ஆர்ஜே,விஜே, யூ டியூபர், நடிகர் என பல முகங்கள் கொண்டவர் அபிஷேக் ராஜா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களுக்கு மதுரையைச் சேர்ந்த அபிஷேக் ராஜாவைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. சமூக வலைதளங்களில் இல்லையா நீங்க? பரவால்ல இனிமேல் இவரைப் பற்றி தெரிஞ்சுப்பீங்க!

நமீதா மாரிமுத்து: சென்னையைச் சேர்ந்த நமீதா மாரிமுத்து, கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும்போது வீட்டை விட்டு வெளியேறினார். திருநங்கைகளுக்காக நடத்தப்படும் ஃபேஷன் ஷோவில் மிஸ் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய நமீதா, மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் 2020 விருதை வென்றுள்ளார். பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதல் திருநங்கை இவங்கதான்.

பிரியங்கா: விஜய் டி.வி தொகுப்பாளர் பட்டியலைச் சொன்னால் நினைவுக்கு வருபவர்களில் பிரியங்காவும் ஒருவர். கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். சென்னை எத்திராஜில் கல்லூரிப் படிப்பை முடித்தவர். ஆரம்பத்தில் தமிழ் பேசுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார், பிரியங்கா.. முன்னணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

அபினய் வட்டி: ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரன் அபினய் வட்டி. யங் இந்தியா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தமிழில் ராமானுஜன் என்ற படத்தில் நடித்துள்ளார் அபினய். இந்தப் படம் கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்று படமாகும். டென்னிஸ், விவசாயம் போன்றவற்றிலும் ஆர்வம் உடையவர்.

பாவனி ரெட்டி: விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான சின்ன தம்பி சீரியல் மூலமாக பிரபலமானவர் இவர். ரெட்டைவால் குருவி, பாசமலர், ராசாத்தி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சின்ன பொண்ணு : சிவகங்கையைச் சேர்ந்த சின்ன பொண்ணு, தமிழில் கிராமியப் பாடல்களைப் பாடி புகழ் பெற்றார். சந்திரமுகி படத்துல `வாழ்த்துறேன்.. வாழ்த்துறேன்..’ பாடலை பாடியிருப்பாங்க. `நாக்கு முக்கா’ பாடல் இவங்க பாடியதுதான். ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி அனிருத் வரைக்கும் பல மியூசிக் டைரக்டர்கிட்ட பாடியிருக்காங்க.

நதியா: மலேசியாவைச் சேர்ந்த டிக்டாக் கலைஞர் நதியா. `மிஸஸ் மலேசியா வேர்ல்டு 2016’ உள்பட பல்வேறு அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறார். யூடியூபில் இவரின் சேனலுக்கு 56,900 சப்ஸ்கிரைபர்களும், இன்ஸ்டாவில் 35,700 ஃபாலேயர்களும் இருக்கிறார்கள்.  

நிரூப் : மாடலாக இருந்து நடிகராக முயற்சி செய்துகொண்டிருப்பவர்தான் நிரூப். உயரம் காரணமாக நிறைய ஆடிஷன்களில் நிராகரிக்கப்பட்டதாக ஷோவில் சொல்லியிருந்தார். சமீபத்தில் விபத்துக்குள்ளான யாஷிகாவின் நெருங்கிய நண்பர்தான் நிரூப்.

சிபி: மாஸ்டர் படத்தில் ஜேடியின் மாணவராக நடித்தவர் சிபி புவனசந்திரன். இதற்கு முன் வஞ்சகர் உலகம் படத்தின் லீடு ரோலில் நடித்து கவனம் பெற்றார். தவிர சூர்யா - பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

தாமரைச் செல்வி : திருவிழா சமயத்தில் ஊர் பக்கம் நடக்கும் ஆடல் பாடல், நாடக நிகழ்ச்சிகள் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு பலரும் அடிமை. அப்படியான நிகழ்ச்சிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் கலைஞர்தான் தாமரை செல்வி. திண்டுக்கலைச் சேர்ந்த இவர், அந்த ஊரை சுற்றி உள்ள பல ஊர்களின் நாடகங்களில் இவர் நடித்திருக்கிறார்.

ஐக்கி பெர்ரி : தஞ்சாவூரைச் சேர்ந்த ராப் பாடகி ஐக்கி பெர்ரி. பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர் ரம்யாவிடம் ஆரம்பகாலத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் ரஹ்மானுக்கு சொந்தமான KM கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். 

அக்‌ஷரா: சென்னையைச் சேர்ந்த மாடல் அழகி அக்‌ஷரா. மாடலிங் மட்டுமல்லாது சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார். போக, `பில்கேட்ஸ்’ என்ற கன்னட படத்திலும் நடித்திருக்கிறார். `சூப்பர் குளோப் 2019' பட்டமும் வென்றுள்ளார். 

சுருதி: சேலத்தை சேர்ந்தவர் சுருதி. இவர் மாடலிங் துறையைச் சேர்ந்தவர். Dark is divine campaign மூலம் பிரபலமாவன இவர் 2020-ல் நடந்த மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியின் டாப் 20-க்குள் இடம்பெற்றார். 

இமான் அண்ணாச்சி: தற்போது பல்வேறு படங்களில் சின்ன கேரக்டர் ஏற்று நடிப்பதோடு சில டிவி நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார். சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கும் முன் தள்ளுவண்டியில் காய்கறி விற்றுக்கொண்டிருந்தவர். பல வருட உழைப்புக்குப் பிறகே திரைத்துறையில் தனக்கான ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். 

வருண் : தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வருபவர் வருண். ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவா படத்தில் அவருக்கு அசிஸ்டென்ட்டாக பணியாற்றினார். அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் சொந்தக்காரரான இவர், கௌதம் மேனன் இயக்கிய `ஜோஷுவா: இமைபோல் காக்க' படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

தமிழக சுங்கச் சாவடி ஊழல்; குறைக்கப்பட்ட வாகன எண்ணிக்கை – ஃபாஸ்டேக்கால் வெளியான அதிர்ச்சி!