ஈழத்துப் போர்ல என் கடை தரைமட்டம் ஆகிடுச்சு! ``1983-ல இலங்கை அகதியா சிதம்பரம் பக்கத்துல ஒரு கேம்ப்புக்கு வந்தேன். அப்புறம் சினிமா சான்ஸ் தேடி சென்னை வந்தேன். ஒரு கட்டத்துல சினிமாவே வேண்டாம்னு 1987-ல மறுபடி சிலோன் போயிட்டேன். அங்க அப்பா, அம்மா இறந்த செய்தி கேட்டோம். மனசு வெறுத்து இருந்த சமயம் நானும் என் தம்பியும் சேர்ந்து ஒரு வீடியோ கடை ஆரம்பிச்சோம். 1990 ஈழத்துப் போர்ல அந்தக் கடையும் தரைமட்டம் ஆகிடுச்சு. எனக்கு கால்ல குண்டடிபட்டுச்சு. இப்படிலாம் கஷ்டப்பட்டுதான் சினிமாவுக்குள்ள வந்தேன்” - போண்டா மணி
யோகி பாபு நல்ல மனசுக்காரர்! ``கண்டமணி, செந்தில் அப்புறம் வடிவேலு, விவேக் அளவுக்கு இப்ப காமெடிகள் இல்ல. அதுக்குனு நான் அவங்களை குறை சொல்லலை. எங்களைப் பொறுத்தவரை யோகி பாபுவை நாங்க பெரிய காமெடியன்னு சொல்ல முடியாது. மக்கள் அவரோட காமெடி ஸ்டைலை ஏத்துக்கிட்டாங்க. பிசினஸ் ஆர்டிஸ்ட் ஆகிட்டார். யோகி பாபு ஒரு முறை போன் பண்ணி, `5 படம் பண்றேன். நம்ம பண்ணலாம். கஷ்டப்பட்டுதான் நம்ம வந்துருக்கோம்’னு சொன்னார். நல்ல மனசுக்காரர்.” - போண்டா மணி
கலைஞருக்குப் பிடிச்ச காமெடி! ``வடிவேலு கூட நான் பண்ண `அடிச்சுக்கூட கேட்பாங்க' காமெடி கலைஞர் ஐயாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அம்மாவைப் பார்க்கறதுக்கு முன்னாடி ஒருமுறை கலைஞர் ஐயாவைப் பார்க்கப் போனேன். பார்த்த உடனே, ஐயா கால்ல விழுந்து கும்பிட்டேன். என்னை ஸ்டாலின்தான் பிடிச்சு தூக்கிவிட்டார். நான் அ.தி.மு.க ஆள்னு உடனே என்கிட்ட, `அடிச்சுக் கேட்டாலும் என்னைப் பார்த்தேன்னு வெளில சொல்லிடாத'னு கலைஞர் ஐயா அவரோட ஸ்டைல்ல சொன்னார்” - போண்டா மணி
ஒற்றுமையா இருந்தாதான் அ.தி.மு.க ஜெயிக்கும்! ``நான் எம்.ஜி.ஆர் ரசிகனா இருந்தாலும், அரசியல் தலைவர்ல கலைஞர் ஐயாவை ரொம்பப் பிடிக்கும். அவர் அரசியல் சாணக்கியர். அதே மாதிரி அவர் எழுத்துல வந்த சினிமாக்களை அசைக்க முடியாது. அவர் அரசியல்ல இருக்கப்பதான் எம்.ஜி.ஆர் வெளில வந்தார்; ADMK உருவாச்சு. அப்புறம் புரட்சித் தலைவர், அம்மானு ரெண்டு பேரும் போன பிறகு கட்சியை நாசம் பண்ணிட்டு இருக்காங்க. என்னைக்கு எல்லாரும் ஒற்றுமையா வேலை செய்றாங்களோ அன்னைக்குதான் அ.தி.மு.க நின்னு ஜெயிக்கும்” - போண்டா மணி
சட்டையைக் கழற்றிக் கொடுத்த ரஜினிகாந்த்! ``ஹீரோக்கள்ல எனக்கு பிடிச்சவர் சூப்பர் ஸ்டார். தொழிலை ரொம்ப மதிக்கிறவர். முத்து படத்தோட சண்டை காட்சியை எடுக்கும்போது ரஜினி சாருக்கு டூப் போடுறவரோட சட்டை கிழிஞ்சிடுச்சு. மறுபடி ஷூட் போகணும்னா ரொம்ப செலவாகும். உடனே, ரஜினி சார் அவர் போட்டிருந்த சட்டையைக் கழட்டி டூப் போட்டவருக்குக் கொடுத்தார். அந்த சட்டையை மறுபடி இவர் வாங்கி போடுறதுக்கு முன்னாடி, `இதை வாஷ் பண்ணி கொண்டு வாங்க’னு அங்க இருக்க யாரோ சொன்னாங்க. `அதெல்லாம் வேணாம். அவரும் ஆர்டிஸ்ட்; நானும் ஆர்டிஸ்ட்’னு சொல்லி அந்த சட்டையைப் போட்டு நடிச்சார்” - போண்டா மணி