2023 பொங்கலுக்கு அஜித் Vs விஜய் படம் என துணிவும் வாரிசும் பாக்ஸ் ஆபிஸில் மோதுகின்றன. இருவரது படமும் ஒரே நாளில் வெளிவருவது இது 13-வது முறை... இதுவரை நடந்த மோதல்களில் வின்னர் யாரு?

வான்மதி Vs கோயம்புத்தூர் மாப்பிள்ளை (1996)

1996 பொங்கலுக்கு ரிலீஸான அஜித்தின் வான்மதி மற்றும் விஜய்யின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஆகிய இரண்டு படங்களுமே வசூல் சாதனை புரிந்தன. ஆனால், கோயம்புத்தூர் மாப்பிள்ளையும் கையே ஓங்கியிருந்தது.

கல்லூரி வாசல் Vs பூவே உனக்காக (1996)

முதல் மோதல் நடந்து ஒரு மாதத்திலேயே பிரசாந்துடன் அஜித் நடித்திருந்த கல்லூரி வாசல் படமும் பூவே உனக்காக படமும் ஒரே நாளில் ரிலீஸாகின. பூவே உனக்காக மிகப்பெரிய ஹிட்டானது.

காலமெல்லாம் காத்திருப்பேன் Vs நேசம் (1997)

மின்சாரக் கனவு, இருவர் படங்களோடு வெளியான இந்த இருவரின் படங்களில் விஜய்யின் காலமெல்லாம் காத்திருப்பேன் வெற்றிப் படமாக அமைந்தது.

ரெட்டை ஜடை வயசு Vs காதலுக்கு மரியாதை (1997)

1997 டிசம்பரில் ஒருவார இடைவெளியில் வெளியான இந்த இரண்டு படங்களில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பைப் பெற்றது விஜய்யின் காதலுக்கு மரியாதை படம்தான்.

உன்னைத் தேடி Vs துள்ளாத மனமும் துள்ளும் (1999)

இரண்டு படங்களுமே ஹிட்தான் என்றாலும் விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் வெற்றி பெரிதாகப் பேசப்பட்டது.

உன்னைக்கொடு என்னைத் தருவேன் Vs குஷி (2000)

அஜித், சிம்ரன், நாசர் என பெரிய ஸ்டார் கேஸ்டிங்கோடு வெளியான உன்னைக் கொடு என்னைத் தருவேன் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக சோபிக்கவில்லை. அதேநேரம், விஜய் - ஜோதிகா நடித்த குஷி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

தீனா Vs ப்ரண்ட்ஸ் (2001)

2001 பொங்கலுக்கு வெளியான அஜித்தின் தீனாவும் விஜய்யின் ப்ரண்ட்ஸ் படமும் சூப்பர் ஹிட்தான் என்றாலும், அஜித்தை ஆக்‌ஷன் ஹீரோவாக நிலைநிறுத்திய தீனா படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. 

வில்லன் Vs பகவதி (2002)

வில்லன், பகவதி என இரண்டு படங்களுமே கமர்ஷியலா ஹிட்டடித்தன. ஆனால், ஒப்பீட்டளவில் வில்லனின் வெற்றி பெரியது.

ஆஞ்சநேயா Vs திருமலை (2003)

போலீஸ் ஆபிஸராக அஜித் நடித்திருந்த ஆஞ்சநேயா ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியது. அந்த நேரத்தில் திருமலை ஆஞ்சநேயாவைவிட சிறப்பாக பெர்ஃபார்ம் செய்தது.

பரமசிவன் Vs ஆதி (2006)

அஜித்தின் பரமசிவன் மற்றும் விஜய்யின் ஆதி ஆகிய இரண்டு படங்களுக்குமே நெகட்டிவ் ரிவ்யூஸ்தான் அப்போது கிடைத்தன.

ஆழ்வார் Vs போக்கிரி (2007)

விஜய்யின் போக்கிரி கமர்ஷியலாக ஹிட்டடித்த நிலையில் அஜித்தின் ஆழ்வார் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது.

ஜில்லா Vs வீரம் (2014)

இரண்டு படங்களுமே கொண்டாடப்பட்டதுதான் என்றாலும் அஜித்தின் வீரம் இந்த ரேஸில் வின்னராக மிளிர்ந்தது.