யானைகளுக்கு இப்படி எல்லாமா குணம் இருக்கு?!

யானைகளோட குணங்கள், அதோட பழக்க வழக்கங்கள் கொஞ்சம் வித்தியாசமானதுஅதைப்பத்திதான் நாம தெரிஞ்சுக்கப் -போறோம்.

'பேச்சுலர்'  யானைகள்

Arrow

யானைகள் பொதுவாவே கூட்டமாத்தான் வாழும். ஆண் யானை அதோட பருவ வயதுக்கு வந்தவுடனேயே மத்த யானைகள் ஒண்ணா சேர்ந்து தனியே விரட்டிடும். இப்படி விரட்டப்பட்ட 'பேச்சலர்' யானைகள் ஒன்னா சேர்ந்து அதுக்கு ஒரு கூட்டமாத்தான் வாழும்.

பருவ ஆண் யானைகள் தனக்கானத் துணையைத் தேட ஆரம்பிக்கும். தனக்கு ஏத்த துணையைக் கண்டதும் ஆண் யானை கொஞ்ச நேரம் கூட அதன் துணையை விட்டு விலகாமல் கூடவே பயணிக்கும்.

தலைமைப் பண்பு!

Arrow

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

வயதான பெண் யானைதான் மத்த யானைகளுக்கு வழிகாட்டியா தலைமையேத்து மொத்த கூட்டத்தயே கூட்டிட்டு போகும். ஒரு பெண் யானைக்கு ரொம்ப வயசு அதிகமாகிட்டா கூட்டத்துல இருக்குற அடுத்த சீனியாரிட்டியான பெண் யானை தலைமை பதவிக்கு வரும்.

அதே மாதிரி என்னைக்காவது ஒரு யானைக் கூட்டம், இன்னொரு யானைக் கூட்டத்துக்கூட சந்திச்சுக்கிட்டா ஒரே கும்மாளமும் கொண்டாட்டமாவும் இருக்கும்.

காதை ஆட்டுவதன் ரகசியம்!

Arrow

யானையோட நகத்துல மட்டுமே வியர்வை சுரக்கும். மத்த இடத்துல வியர்வை சுரக்காது. இதனால உடல் வெப்ப நிலை  சீராக இருக்காது. இதை சமன்படுத்துறதுக்காக யானை காதை ஆட்டிக்கிட்டே இருக்கும்.

இதன் மூலமா உடம் வெப்பம்  1 டிகிரி செல்சியஸ் வரைக்கும் குறைக்குமாம். இதைத் தவிர்த்து உடல் வெப்பத்தைக் குறைக்க தன்மேல் தண்ணீர் தெளிக்கிறது, எச்சிலை விழுங்குறது மூலமும் வெப்ப நிலை குறைப்புல ஈடுபடும்.

மதம் மூன்று மாதம்!

Arrow

ஆண் யானைக்கு காதுக்கும், கண்ணுக்கும் இடையில் உள்ள வீக்கமான பகுதியில மதநீர், ஆண்டுக்கு ஒருமுறை வழியும். இப்புடி வழியுறதுதான் யானைக்கு மதம் பிடிச்சிருக்குனு சொல்றாங்க. இது மூன்று மாதங்கள் வரை நீடிக்கும்.

யானைகளுக்கு பொதுவாவே 15 வயசுல இருந்து 20 வயசுக்குள்ளதான மதம் பிடிக்க ஆரம்பிக்கும். 45 வயசு வரைக்கும் மதம் பிடிக்கும். மதம் பிடிச்ச ஆண் யானைக்கு மற்ற யானைகளைப் பிடிக்காது. பெண் யானையுடன் இணைசேரத் துடிக்கும்.

தொடர்பு கொள்வதில் கில்லாடிகள்!

Arrow

இயற்கையாகவே யானைகளுக்கு பார்க்கும் திறன் குறைவு. யானைகள் தொடுதல், அருகில் இருப்பவற்றை பார்த்தல், சத்தம், ரகசியமாக சத்தமிடுதல், யானைகளிலிருந்து வெளிப்படும் ஒருவித வாசனைகளால தங்களோட தகவல்களை பரிமாறிக்குது.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

எல்லா படங்கள்லயும் யானை கோவமா இருக்கும்போது பிளிறுகிற மாதிரி காட்டுவாங்க. ஆனா, உண்மையா மகிழ்ச்சியாக இருக்கும்போதுதான் பிளிறும். கோபமாக இருக்கும் போது "கிரீச்... கிரீச்...' என்ற சத்தத்தை வெளிப்படுத்தும்.

மிருதுவான பாதம்!

Arrow

தூண்கள் மாதிரியான கால்களால வேகமா ஓட முடியுமே தவிர, யானையால தாவ முடியாது. யானையோட கால் பார்க்க ரொம்ப முரடாகத் தெரியும். ஆனால், அதன் பாதம் மென்மையானது. நடக்கும்போது யானையின் பாதம் விரியும். தரையில் இருந்து காலை எடுக்கும்போது சுருங்கும்.

யானை எதிர்கொள்ளும் சிக்கல்கள்!

Arrow

மனிதன் ஏற்படுத்தின வளர்ச்சி, காட்டுத் தீ, கால்நடைகள், மரம் சேகரிப்பவர்கள்ன  யானைகள் பல சவால்களை சந்திக்குது.

இதுபோக காட்டுப்பகுதிக்கு வர்ற சுற்றுலா பயணிகள் சிலர், காலியான மதுபாட்டில்கள் எல்லாத்தையும் அங்கேயே போட்டு வந்துடுறாங்க. முன்னாடியே சொன்ன மாதிரி யானையோட பாதம் அவ்ளோ சென்சிடீவ் ஆனது. அந்த பாட்டிலை மிதிக்கிற யானைகளோட பாதம் கிழிஞ்சு சீல் பிடிச்சிடுது. இதனால யானைகள் ரொம்பவே பாதிக்கப்படுது.