கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிடுச்சு. கிறிஸ்துமஸ்னா என்னலாம் நியாபகம் வரும்? ஸ்டார், பட்டாசு, புது டிரெஸ், கிறிஸ்துமஸ் தாத்தா, பரிசுகள்... அப்புறம் முக்கியமா கேக். உலக அளவில் கிறிஸ்துமஸ் சமயங்களில் என்ன கேக்லாம் ஃபேமஸா இருக்குதுனு பார்ப்போமா?
பிரான்ஸ் நாட்டு மக்கள் விரும்பி உண்ணும் கேக், Galette Des Rois. குறிப்பாக கிறிஸ்துமஸ் சமயங்களில் ரொம்பவே ஃபேமஸ்
Pan de Pascua - சிலி நாட்டு மக்களுக்கு Pan de Pascua கேக் என்றால் அவ்வளவு விருப்பமாம். இந்த கேக்கின் பெயருக்கு `Easter bread’ என்று அர்த்தம். கிறிஸ்துமஸ் நேரங்களில் சிலி நாட்டுக்கு நீங்க போனீங்கனா, சூடான காஃபியுடன் இந்த கேக்கும் கிடைக்கும்.
Black Forest Cherry Cake - Black Forest கேக்கை நாமளும் ருசி பார்த்திருப்போம். ஆனால், ஜெர்மனியில் கிடைக்கும் Black Forest கேக்குக்கு கொஞ்சம் அதிகமாகவே ருசி அதிகம். இந்த கேக் இல்லாமல் ஜெர்மனி மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடவே மாட்டாங்களாம்.
Dundee Cake - இங்கிலாந்து மக்களின் ஃபேவரைட் கேக், Dundee Cake. இந்த கேக்கோட டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்னு சொல்றாங்க.
Bolo Rei - பார்க்கவே கலர்ஃபுல்லா இருக்கும் இந்த Bolo Rei கேக். போர்ச்சுக்கல் மக்கள் அதிகளவில் விரும்பி சாப்பிடுறாங்க. கிரௌன் வடிவில் இந்த கேக் இருக்கும். கிறிஸ்துமஸ் நேரம் தொடங்கியதில் இருந்து ஜனவரி முதல் வாரம் வரைக்கும் இந்த கேக் கிடைக்கும்.
Tres Leches Cake - மெக்சிகோவில் கிறிஸ்துமஸ் நேரம் இந்த கேக் கிடைக்கும். பட்டர்தான் இந்த கேக்கோட முக்கியமான இன்கிரிடியன்ட்.
இந்த கேக்ல நீங்க டேஸ்ட் பண்ணது... இல்லைனா... டேஸ்ட் பண்ண ஆசைப்படுற கேக் வகைகளை கமெண்ட்ல சொல்லுங்க!