அமீர் எனும் தனிக்காட்டு  ராஜா!

முதல் முதலா நந்தா படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்த அமீர், 70% ஷூட்டிங் முடிஞ்ச நேரத்துல வெளியேறினார். டைட்டில் கார்டுல அமீரோட பெயரும் இடம்பெறாதது, இது பெரிய வலியையும், அவமானத்தையும் கொடுத்திருக்கிறது

மௌனம் பேசியதே ஷூட்டிங் சமயம், பெரிய அனுபவம் இல்லாத இயக்குநர் அமீர் கிண்டல் பேச்சுகளுக்கு உள்ளாகியிருக்கி-றார். ஆனால், படம் ஹிட்டடித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அதன்பிறகு, தயாரித்து இயக்கிய ராம் படம் பொருளாதாரரீதியாக அமீருக்குக் கைகொடுக்கவில்லை. ஆனால், சைப்ரஸ் பட விழாவில் சுமார் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு தமிழ் ஹீரோ ஒருவருக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது இந்தப் படத்துக்குத்தான்.

பருத்தி வீரன் படம் தயாரான பிறகு கருணாநிதிக்கு அதைப் போட்டுக் காட்டியிருக்கிறார்.  'என்னோட தூக்கத்தை கெடுத்துட்டியே, இன்னைக்கு இரவு முழுக்க தூக்கமே வராதேப்பா. கனமான முடிவா இருந்தாலும் நல்லா இருக்கு' என்று அவர் மனம் விட்டு பாராட்டியிருக்கிறார்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

பருத்தி வீரன் ஹிட்டுக்குப் பிறகு பெப்சி தலைவரான அமீர், படங்கள் இயக்காமல் சுமார் 6 வருடங்கள் இடைவெளி எடுத்துக் கொண்டார். தனிப்பட்ட முறையில் பெரிய வாய்ப்புகளையும் இழந்திருக்கிறார்.

வட சென்னை ராஜனாக அமீர் மிகப்பெரிய கம்பேக் கொடுக்கக் காரணமானவர் இயக்குநர் வெற்றிமாறன். இயக்குநர் அமீரை ஒரு முழுமையான நடிகனா கவனிக்க வச்ச படம்னா அது வடசென்னைனு கூட சொல்லலாம்.

யாருக்காகவும், எதற்காகவும் எப்போவும் தன்னை மாத்திக்க மாட்டார். அடுத்தவர்கள் 'சினிமாவுல இப்படித்தான் இருக்கணும்'னு யோசனை சொன்னா, 'நான் எங்கப்பா, அம்மா சொல்லியே கேட்கலை, என் குணம் நானா யோசிச்சாதான் மாறும். யாரும் சொல்லி மாற மாட்டேன்'ங்குறதுதான் அமீரோட பதிலா இருக்கும்.

அதன்பிறகு வாய்ப்புகள் வரிசை கட்டினாலும், 'எனக்கு சரினு பட்டா நான் பண்ணுவேன்’னு, ’எனக்கு ராஜாவா நான் வாழுறேன்'ங்குற மோடுலதான் அமீர் இப்பவும் இருக்கார்.