தேவர் மகன் முதல் ஜெய்பீம் வரை... சர்ச்சையில் சிக்கிய 20 படங்கள்!

தேவர்மகன் (1992) - குறிப்பிட்ட சமூகத்தைத் தூக்கிப் பிடிப்பதாகக் கூறி விமர்சனங்கள் எழுந்தன.

பாபா (2002) - ரஜினிகாந்த் புகைபிடிப்பது, பெரியார் பற்றிய பாடல்வரிகள் போன்றவை சர்ச்சையை ஏற்படுத்தின.

பாய்ஸ் (2003)  - படத்தில் ஆபாச காட்சிகளும் வசனங்களும் இருப்பதாகக்கூறி சர்ச்சையானது.

விருமாண்டி (2004) - குறிப்பிட்ட சமூகத்தினரின் புகழ் பாடுவதாக விமர்சனத்துக்குள்ளானது. 

தசாவதாரம் (2008) - இரண்டு மதக் குழுக்களிடையே பிரச்னையை ஏற்படுத்தும் விதமாக காட்சிகள் இருந்ததாக சர்ச்சையில் சிக்கியது. 

சிந்து சமவெளி (2010) - உறவுகளைத் தவறாக சித்திரித்ததாகக் கூறி பெண்கள் அமைப்பினர் எதிர்த்தனர்.

நடுநிசி நாய்கள் (2011) - சில காட்சிகளுக்கு எதிராக இந்தி மக்கள் கட்சியினர் சர்ச்சைகளை எழுப்பினர்.

துப்பாக்கி (2012) - இஸ்லாமியர்களைத் தவறாக சித்திரித்ததாகப் பிரச்னைகள் எழுந்தன.

தலைவா (2013) - `டைம் டு லீட்’ என்ற டேக் லைன் முதல் திரைப்படம் பல சர்ச்சைகளைச் சந்தித்தது.

இனம் (2013) - தமிழ் ஈழப் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதுகுறித்த சர்ச்சை எழுந்த நிலையில், வெளியான ஒருசில நாட்களிலேயே தடை செய்யப்பட்டது.

விஸ்வரூபம் (2013) - இஸ்லாமியர்களைத் தவறாக சித்தரிக்கும் வகையில் படத்தின் காட்சிகள் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

லிங்கா (2014) - முல்லை பெரியாறு அணை வரலாற்றை மையமாக வைத்து படம் எடுத்ததாக சர்ச்சை எழுந்தது.

மெர்சல் (2017) - கோயிலுக்குப் பதிலாக மருத்துவமனை கட்டுதல், ஜி.எஸ்.டி பற்றிய வசனம் போன்றவை சர்ச்சையை ஏற்படுத்தின.

வடசென்னை (2018) - வடசென்னை மக்களைத் தவறாக சித்தரித்ததாக கூறி சர்ச்சைகள் எழுந்தன.

சர்கார் (2018) - அப்போதைய அ.தி.மு.க அரசின் நலத்திட்டங்களைக் கடுமையாக விமர்சித்த காட்சிகள், விஜய் புகைபிடிக்கும் காட்சிகள் சர்ச்சையைக் கிளப்பின.

அசுரன் (2019) - `ஆண்ட பரம்பரை’ தொடர்பான வசனங்களால் இந்தப் படம் அதிக சர்ச்சைகளை சந்தித்தது.

ஆடை (2019) - தமிழ் கலாசாரத்தை அவமதிப்பதாகக் கூறி சர்ச்சைகள் எழுந்தன.

திரௌபதி (2020) - சாதியப் பெருமையைப் பற்றி பேசுவதாகக்கூறி படத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தன.

ருத்ர தாண்டவம் (2021) - மதம் மற்றும் சாதி தொடர்பான சர்ச்சைகளைக் கிளப்பியது.

ஜெய்பீம் (2021) - வன்னியர் சமூக மக்களை தவறாகக் காட்சிப்படுத்தியதாக சர்ச்சை கிளம்பியது.

Freddie Mercury – இந்தியாவில் இருந்து கிளம்பிய முதல் இசைப்புயல்!