சீரியல் அலப்பறைகள்... பீஸ்ட் படத்தையே எத்தனை தடவைடா காப்பியடிப்பீங்க?

முன்னாடிலாம் சீரியல்ல அழுது மூக்கை சீந்திட்டு, சென்டிமென்டா பேசி நெஞ்சை நக்கிட்டு, குடும்பங்களை கெடுக்க சூனியம் வைச்சிட்டு, சந்தேகப்பட்டுட்டு திரிவாங்க. ஆனால், இப்போ ஆக்‌ஷன் சீக்குவன்ஸ், மாஸ் சீன்ஸ், ஃபைட் சீன்ஸ்னு விஜய், அஜித் படத்துக்கே டஃப் கொடுக்குறாங்க.

சோகம் என்னனா அந்த சீன்கள், பி.ஜி.எம் எல்லாத்தையும் அவங்க படத்துல இருந்தே சுட்டு வைக்கிறாங்க. அதெல்லாம் பார்க்கும்போது, எலே யாம்லே இப்படி பண்றியோனு ஜி.பி.முத்து ஸ்டைல்ல சொல்லத் தோணுது.

பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில ரொம்பவே ஃபேமஸ். சோஷியல் மீடியாலயும் இப்போ கண்ணம்மா பேரை சொன்னா இந்த சீரியல்தான் நியாபகம் வரும். ஏன்னா, உலகத்துலயே அதிக தூரம் நடந்தவங்கன்ற கின்னஸ் ரெக்கார்ட் கண்ணம்மாவுக்கு இருக்கு.

அதுல சென்னையில் ஒரு நாள் படத்தை காப்பியடிச்சு சிலபல எபிசோடுகளை ஓட்டியிருப்பாங்க. அந்தப் படத்தோட கதை என்ன? இதயத்தை ஆம்புலன்ஸ்ல சென்னைக்கு குறிப்பிட்ட நேரத்துல கொண்டு வரணும்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

அதுக்காக என்னலாம் பண்றாங்க. அதுதான? அதை கொஞ்சம்கூட பட்டி டிங்கரிங் பார்க்காம, பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணும்னு அப்படியே எடுத்து வைச்சிருக்காங்க.

ரோடு பிளாக் பண்றது, மக்களுக்கு லைவ் பண்றது, இடைல தடங்கல் வர்றதுனு ஒண்ணும் மிஸ் ஆவலை. விழுப்புரத்துல வெற்றிகரம்னு வ-க்கு வ-போட்டு ரைமிங் டயலாக் வேற. என்ன ரங்கா நியாயமா? இதெல்லாம்.

பீஸ்ட் படத்தையும் விட்டு வைக்கல. அந்தப் படத்தை மறக்கணும்னு தளபதி ரசிகர்கள் நினைச்சாலும் ட்ரோல் பண்றதுக்கு இவங்களே கன்டென்ட் எடுத்துக் கொடுக்குறாங்க.

பீஸ்ட் படத்துல மால் ஹைஜாக் பண்ணுவாங்க. ஆனால், இதுல ஹாஸ்பிடலை ஹைஜாக் பண்ணுவாங்க. அதுகூட பரவால்லங்க. ஆனால், விஜய் நடந்து வந்த பி.ஜி.எம் போட்டு நீங்க நடந்து வந்தீங்களே, தளபதி ஃபேன்ஸ் எப்படிடா தாங்குவாங்க.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

அதையும் விடுங்கடா, கடைசில ஹீரோ மக்களை காப்பாத்துவாங்கனு பார்த்தா, டெரரிஸ்ட்டே காப்பாத்துற மாதிரி இருக்கும். அப்புறம் எதுக்கு இவ்வளவு பில்டப்? பீஸ்ட் படமே 2:30 மணி நேரத்துல முடிச்சிருவாங்க.

ஆனால், நீங்க எத்தனை எபிசோடைடா ஓட்டுவீங்க? கிட்டத்தட்ட 20 எபிசோடு எடுத்து வைச்சிருக்காங்க. ஹைலைட் என்னனா, போலீஸ்கிட்ட பேச சிக்னல் கிடைக்கலை, கொஞ்சம் கழிச்சு பேசுவோம்னு சொல்லுவாங்க. யார்ரா நீங்கலாம்? தீவிரவாதிக்கான மரியாதை போச்சேடா. ஆனால், மக்களே வைச்சு செஞ்ச படத்தை எடுத்து பல எபிசோடு எடுத்து மக்களை வைச்சு செஞ்சது நீங்கதான்.

சத்யானு ஒரு சீரியல் ஓடுது. அரசல் புரசலா நீங்களும் கேள்விப்பட்டிருப்பீங்க. அதுல ஹீரோயின் போலீஸா இருப்பாங்க. அவங்க தெறி படத்துல வர்ற கிளாஸ் ரூம் சீன் இருக்குல அதை அப்படியே எடுத்து வைச்சிருப்பாங்க.

யார்கிட்ட? நம்ம அட்லீகிட்ட இருந்தே சுட்டிருக்காங்க. போர்டுக்கு மேல போய் விஜய் கம்பு எடுக்குற சீன், எவ்வளவு மாஸா இருக்கும். இந்த சீனை பார்த்தீங்கனா, அப்புறம் தெறி படம் பார்க்கும்போதுலாம் இவங்க முகம்தான் நியாபகம் வரும். அப்படி பண்ணி வைச்சிருக்காங்க.

ஏன்டா, இப்படி பண்றீங்க. ``உன்னைப் பார்த்தாலே நல்லா பதில் சொல்ற மாதிரி இருக்குதே. இங்க வா!”னு அவங்க கூப்பிடும்போது சேனலை மாத்துடா பரமானு மனசாட்சி சொல்லும். கேட்டாதானே. அதுவும் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்லாம் கொலை பண்ணி வைச்சிருக்காங்க.

ஏன்டா, தெறிய ஸ்பூஃப் பண்ண இந்த சீனை வைச்சிங்களா? இல்லை நெஜமாவே சீரயஸா வைச்சீங்களா? இதுக்கப்புறம் அதை பார்க்குறதுக்கான மன தைரியம் எங்களுக்கு இல்லை மக்களே!

சில்லுனு ஒரு காதல் - எல்லாருக்குமே பிடிச்சப் படம். இன்னைக்கும் ஃபீல் குட்டா ஒரு படம் பார்க்கணும்னா நிறைய பேர் இந்தப் படத்தைப் பார்ப்பாங்க. அப்புறம் பாடல்கள். நிலவிடம் வாடகை வாங்கினு பாட்டுப் பாடாத காதலர்கள் இன்னைக்கும் கிடையாது.

இப்படிப்பட்ட காதல் காவியமான படத்தோட டைட்டிலை எடுத்து சீரியலுக்கு வைச்சிட்டு இவங்க பண்ற அட்டகாசங்கள் இருக்கே. ஷ்ப்பா! இவங்களும் பீஸ்ட் படத்தை விட்டு வைக்கலை. அடிக்கடி வருவேன்னு போக்கிரில ஒரு டெம்ப்ளேட் இருக்கும்ல? சீரியல்ல பீஸ்ட் படத்தோட சீன்லாம் பார்க்கும்போது அதுதான் நியாபகம் வருது.

பாரதி கண்ணம்மால ஹாஸ்பிடல்னா, இங்க பேங்க். மூக்கு பொடப்பா இருந்தா இப்படிலாம்தான் யோசிக்கத் தோணும். ஆனால், ஒரு நல்ல விஷயம் என்னனா, பீஸ்ட் பி.ஜி.எம் எல்லாம் வராது. அந்த வகைல கொஞ்சம் தப்பிச்சோம். இனிமேல் பீஸ்ட் படத்தை எடுத்து செய்யாதீங்கடா கண்ணுகளா.

இளையராஜாவோட பாடல்கள்ல நிறைய பாட்டு நமக்கு புடிக்கும். அதுல ஒண்ணு, `தென்றல் வந்து என்னைத் தொடும்’ பாட்டு. அதே பேருல சீரியல் ஒண்ணு ஓடுது. இவங்க பண்றது எல்லாமே கிரிஞ்சாதான் இருக்கும்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

லவ் பண்றதுல தொடங்கி கேங்ஸ்டர் ரேஞ்ச்ல சுத்துறது வரைக்கும் எல்லாமேதான். இந்த சீரியல்ல ஹீரோவ போலீஸ் துரத்திட்டு போவாங்க. ஓடிகிட்டே இருப்பாங்க. ஒரு கட்டத்துல சுட்ருவாங்க. கால்ல கர்சிப்பைக் கட்டிட்டு ஓடுவாரு.

அவருக்கு மருந்து வாங்க மெடிக்கல் ஷாப் போனால், டாக்டர் பிரிஷ்கிரிப்ஷன் இல்லாம தர மாட்டேன்னு சொல்லுவாங்க. உடனே, ஒரு கடைல இருந்து ஹீரோயின் மெடிசினை ஆட்டைய போட்டு போய்டுவாங்க. ஆத்தி இது அதுல்லனு தோணுதுல. ஆமா, அதேதான். ஆறு படத்துல வந்த சீன்தான்.

மன்னன், சூர்ய வம்சம், வில்லு, ராஜா ராணி, விஸ்வாசம், எங்கேயும் எப்போதும், கில்லி, விக்ரம், டாணாக்காரன்னு இவங்க சுட்ட படங்களோட லிஸ்ட்டை சொல்லிட்டே போகலாம். ஆனால், அதையெல்லாம் பார்த்து சொல்ற சக்தி எனக்கும் இல்லை. பார்க்குற உங்களுக்கும் இருக்காது.