'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..!’ ஓய்விலிருந்து Comeback கொடுத்த 5 கிரிக்கெட் வீரர்கள்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, சில காலத்துக்குள் மீண்டும் கம்பேக் கொடுத்த 5 வீரர்கள் பற்றிதான் நாம பார்க்கப்போறோம்.

கெவின் பீட்டர்சன்

இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். பேட்டிங்கில் ஜொலித்த அவர், 2012-ல் திடீரென ஓய்வு அறிவித்தார்.

ஆனால், அதே ஆண்டின் பிற்பகுதியில் கிரிக்கெட் வாரியத்தோடு ஏற்பட்ட ஒப்புதலுக்குப் பிறகு, மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்து, 2018 வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடினார்.

பனுகா ராஜபக்ச

இலங்கை அணிக்காகக் கடந்த 2019-ல் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமானவர் பனுகா ராஜபக்ச. டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், 2022 ஜனவரி 3-ல் திடீரென ஓய்வு அறிவித்தார்.

பத்து நாட்களுக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஓய்வு முடிவைத் திருமப் பெற்றுக் கொண்டார்.

ஷாகித் அஃப்ரிடி

1996-ல் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமானவர் ஷாகித் அஃப்ரிடி. 2006-ல் ஓய்வு அறிவித்து சில வாரங்களில் அந்த முடிவைத் திரும்பப் பெற்றார்.

மே 2011-ல் ஓய்வு பெறுவதாக அறிவித்து, ஐந்தே மாதங்களில் மீண்டும் விளையாட வந்தவர், இறுதியாக 2017-ல் அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்றார்.

கார்ல் கூப்பர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 1987-ல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானவர் கார்ல் கூப்பர். அந்த அணியின் மிடில் ஆர்டரில் கலக்கிய இவர், 1999 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஓய்வு பெற எண்ணினார். ஆனால், கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கவில்லை.

2001-ல் மீண்டும் கம்பேக் கொடுத்து கேப்டனாக அசத்திய கூப்பர், 2003 உலகக் கோப்பைக்குப் பின்னர் ஓய்வுபெற்றார்.

பிரெண்டன் டெய்லர்

2004-ல் ஜிம்பாப்வே அணிக்காக அறிமுகமான பிரெண்டன் டெய்லர், 2015-ல் கோல்பாக் ஒப்பந்தத்தால் சர்வதேச வாய்ப்புகளில் இருந்து ஒதுங்கினார்.

2017-ல் கம்பேக் கொடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெய்லருக்கு, ஊழல் காரணமாக ஐசிசி இரண்டரை ஆண்டுகள் தடை விதித்தது.