நான்காவது ஐபிஎல் கோப்பையைக் கையிலேந்தியிருக்கிறது சி.எஸ்.கே. தோனியே நமக்கெல்லாம் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன்தான். அதிலும், நேற்று `தல' பேச்சு முழுக்கவே மோட்டிவேஷனல் டானிக்தான். அவர் பேச்சிலிருந்து நாம் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் வேண்டிய "உத்வேகமூட்டும் 6 Motivational Quotes" இங்கே...
``சி.எஸ்.கே பற்றி பேசுவதற்கு முன்பு, கொல்கத்தா அணியைப் பற்றி முதலில் பேசுவதுதான் முக்கியம். ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் கொல்கத்தா அணி மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஆனால், சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டி வரை வந்திருக்கிறார்கள். இது மிகவும் கடினமாக காரியம். இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை வெல்ல தகுதி உடையது என்று கேட்டால், நிச்சயம் அது கொல்கத்தா என்றுதான் சொல்வேன்” - தோனி
``பிசிசிஐ கையில்தான் எல்லாமே இருக்கிறது. ஐபிஎல் தொடரில் அடுத்த வருடம் 2 புதிய அணிகள் களமிறங்குகின்றன. எனவே, சென்னை அணிக்கு எது நல்லது என்பதைப் பார்க்க வேண்டும். நான் அல்லது நான்கைந்து பேர் மட்டும் எடுக்கக்கூடிய முடிவு இது கிடையாது. சென்னை அணி பாதிப்படையாத அளவுக்கு ஒரு அணியை உருவாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது” - தோனி
``ரசிகர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எங்கு விளையாடினாலும், தென்னாப்பிரிக்காவில் விளையாடியபோது கூட பெரிய எண்ணிக்கையில் மைதானத்துக்கு வந்து ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர். இதைத்தான் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ரசிகர்களுக்கு நன்றி. நாங்கள் சென்னையில் விளையாடியதைப் போல் உணர்ந்தோம். சென்னை ரசிகர்களுக்காக விரைவில் சென்னை வருவோம் என நம்புகிறேன்” - தோனி
``வெற்றியோ தோல்வியோ, நடக்க வேண்டியவற்றில் மட்டுமே கவனம் வைக்க வேண்டும். கடமையை மட்டும் செய்ய வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காத நேரம் என்பது உங்களுக்கான உண்மையான பரிட்சை என்று அர்த்தம். சிறிய அளவில் எடுத்துக்கொண்ட இடைவேளை மீண்டும் ஃபார்ம்க்கு வர உதவியது. விடாமுயற்சி மற்றும் அதற்கான வழிகளில் கவனம் வைப்பதுதான் வெற்றிக்கான ரகசியம்” - தோனி