‘இங்கயெல்லாம் போய்டாதீங்க மக்களே!’ - உலகில் ஆபத்தான 5 ஆறுகள்!

பொதுவா தண்ணியைப் பார்த்தாலே குதிச்சு விளையாடணும்னுதான் தோணும். அதுவும் ஓடுற ஆறுனா சொல்லவே வேணாம். ஆனால், உலகத்துல சில ஆபத்தான ஆறுகளும் இருக்கு. அதைப் பத்திதான் தெரிஞ்சுக்கப்போறோம்.

Congo River, Africa - உலகில் ரொம்பவே ஆபத்தான இந்த ஆறு சுமார் 720 அடி ஆழம் உடையது. இதன் அடிப்பகுதியில் பல பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள்கூட இருக்குதாம்.

Shanay-Timpishka (Boiling River), Peru - அமேசான் ஆறோட ஒரு கிளைதான் இந்த ஆறு. அதிக வெப்பநிலைக் கொண்டது. கையால் தொட முடியாத அளவு வெப்பம் இந்த ஆற்றில் இருக்குமாம்.

Mississippi River, North America - வடஅமெரிக்காவில் மிகவும் நீளமான ஆறு இதுதான். இங்கே ஆபத்தான பல மீன்கள் இருக்குதாம். நீச்சல் வீரர்கள்கூட இங்கே அனுமதிக்கப்படுவதில்லையாம்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

The Nile, Egypt - உலகின் மிகவும் நீளமான நதி இது. நீர் யானைகள், முதலைகள், விஷப்பாம்புகள் அப்டினு ஏகப்பட்ட ஆபத்துகள் இந்த ஆறில் நிரம்பி இருக்குதாம்.

River Wharfe, England - உலகத்துலயே பார்க்குறதுக்கு ரொம்ப அழகா இருக்குற ஆறு இதுதான். ஆனால், இதை நம்பி இந்த ஆற்றுல இறங்குனா அவ்வளவுதானாம்.

இதைத் தவிர்த்து உங்களுக்குத் தெரிஞ்ச ஆபத்தான ஆறுகளை கமெண்டில் சொல்லுங்க!