Finn Lough Resort,, Northern Ireland - சின்ன புள்ளைல அம்மா துணி துவைக்கும்போது நுரையை எடுத்து பபுள்ஸ் விட ட்ரை பண்ணுவோம். கடைசி வரை தோத்துக்கிட்டே இருப்போம்ல? சரி அதை எதுக்கு இப்போ பேசிக்கிட்டு. நம்ம கதைக்கு வருவோம். அந்த Bubble-ஐயே ஒரு ஹோட்டலா டிசைன் பண்ணியிருக்காங்க. அடர்ந்த பசுமையான காடுக்குள்ள இருக்குற இந்த ஹோட்டல் ரூம்ல படுத்துட்டு பார்த்தா மரம், வானம்னு இயற்கையாவே தெரியுமாம்.
Giraffe Mano, South Africa - அந்த நாட்டுல நிறைய பேரோட பக்கெட் லிஸ்ட்ல இந்த ஹோட்டல்ல போய் ஒருநாளாவது தங்கனும்னு ஆசை இருக்குமாம். அவ்வளவு பிடிக்குமாம். இந்த ஹோட்டல்ல நீங்க சாப்பிட்டுட்டு இருக்கும்போது ஒட்டகச்சிவிங்கி ஜன்னல் வழியா வந்து தலையை நீட்டுமாம். விருந்தினர்கள் அந்த ஒட்டகச்சிவிங்கிக்கு சாப்பாடு கொடுப்பாங்களாம்.