மேஷ ராசிக்காரரா நீங்க..? அப்போ நீங்க வழிபட வேண்டிய தெய்வம் இதுதான்!

மேஷ ராசிக்கான அதிபதி யார்… அவர்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

அஸ்வினி, பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் பாகம் வரை உள்ளவர்களுக்கு மேஷ ராசி. இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இந்த கிரகத்தின் அதிதேவதை முருகன்.

மேஷ ராசியின் அஸ்வினி ஞானத்தையும் பரணி அரச யோகத்தையும் குறிப்பவை. இந்த இரண்டு கோலங்களிலும் அருளாசி புரிபவர் அருள்மிகு பழனியாண்டவர்.

மேஷ ராசிக்காரர்கள் பழநியாண்டவரை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலம் பெறுவர்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

நெய் தீபம் ஏற்றுவதோடு செம்பருத்தி உள்ளிட்ட மலர்களை முருகன் திருவடிகளில் சமர்ப்பித்து வேண்டினால் தடைகள், நோய் நொடிகள் நீங்கி வளம் கிட்டும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதம், முருகனுக்கு உகந்த நாட்களில் பழநியாண்டவரை வழிபட்டால் விசேஷ பலன்கள் கிட்டும். பழனிக்கு செல்ல முடியாதவர்கள் அருகிலிருக்கும் முருகன் ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாம்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் மலை உச்சியில் ஸ்ரீதண்டாயுதபாணியாக அருள் பாலிக்கிறார் முருகன். குடும்பத்தோடு பழநி மலைப் படியேறினால் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை.

பழநியாண்டவரை தரிசித்துவிட்டு, அருகிலிருக்கும் போகர் குகை, சரவண பொய்கை, குதிரையாறு அணை நீர்வீழ்ச்சி, வரதமனதி அணை, இடும்பன் ஆலயம், திரு ஆவினன்குடி, பெரிய நாயகி அம்மன் ஆலயம் போன்றவற்றை சுற்றிப்பார்த்து விட்டு வரலாம்.

தைப்பூசம், கார்த்திகை போன்ற விழா நாட்களில் பழநிக்குச் செல்வதாக இருந்தால், முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.