சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர்னு தெரியுமா?

சங்கர் மகாதேவனை ஒரு பாடகரா தெரியும். அவர் ஒரு இசையமைப்பாளர்னு தெரியுமா... இதுவரைக்கும் 80 படங்களுக்கு மேல இசையமைச்சிருக்கார்.

சங்கர் - ஈசான் - லாய்; இந்த மூவர் கூட்டணிதான் 25 வருடங்களாக ஹிந்தி, இங்கிலீஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் 80க்கும் மேலான படங்களுக்கு இசையமைத்திருக்கிறது.

இவர்கள் இசையில் உருவான தில் சாத்தா ஹே, கல் ஹோ நா ஹோ, பண்டி அவுர் பாப்லி, டான், தாரே ஜமீன் பர், ராக் ஆன், மை நேம் இஸ் கான், 2 ஸ்டேட்ஸ் போன்ற படங்கள் இந்திய அளவில் பெரிதும் பேசப்பட்டன. அதே போல் ஆளவந்தான், யாவரும் நலம், விஸ்வரூபம் என மூன்று தமிழ் படங்களுக்கு இசையமைத்திருக்கி-றார்கள்.

எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கு டி.எம்.எஸ், ரஜினி - கமலுக்கு எஸ்.பி.பி என இந்தெந்த நடிகர்களுக்கு இந்தெந்த பாடகர்களோட குரல்கள்தான் நல்லா இருக்கும்னு ரசிகர்கள் நினைப்பாங்க. ரஜினி, கமலுக்கு அப்பறம் வந்த விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ்னு எல்லாருக்கும் செட்டாகுற மாதிரியான குரலா இருந்தது சங்கர் மகாதேவனின் குரல்.

அஜித்துக்கு தாலாட்டும் காற்றே வா, என்ன சொல்லப்போகிறாய்; விஜய்க்கு ஆள்தோட்ட பூபதி, சரக்கு வெச்சிருக்கேன், நீயா பேசியது, மச்சான் பேரு மதுர; சூர்யாவுக்கு சோடா பாட்டில் கையில, சில்லுனு ஒரு காதல், சிங்கம்; தனுஷுக்கு மன்மதராசா, படிச்சுப்பாத்தேன்; சிம்புவுக்கு பிள்ளையார் சுழி போடுவேன், கலக்குவேன் கலக்குவேன், கொக்கு மீன திங்குமா என எல்லா நடிகர்களுக்கும் அவர்களின் கரியர் பெஸ்ட் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

சங்கர் மகாதேவன் கிட்டத்தட்ட 30 வருடங்களாக ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, துலு என 7 மொழிகளில் 7000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். அதிலும் குறிப்பாக தமிழில் டான்ஸ் நம்பர், மெலடி நம்பர் என இரண்டிலும் கலக்கியிருக்கிறார்.

தனியே தன்னந்தனியே, என் அன்பே என் அன்பே, ஆசை ஆசை, பூபறிக்க நீயும் போகாதே, காதல் சிலுவையில் போன்ற மெலடி பாடல்களும் வாடி வாடி நாட்டுக்கட்ட, கட்ட கட்ட நாட்டுக்கட்ட, சரோஜா சாமானிக்காலோ போன்ற டான்ஸ் நம்பர் பாடல்களும் இன்றுவரைக்கும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கின்றன.