`தளபதி முதல் விக்ரம் வேதா வரை...’ - எதிர்பார்ப்புகளை எகிற வைத்த டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள்

தமிழ் சினிமாவில் இரண்டு கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது மிகவும் அரிதான ஒன்று. குறிப்பாக ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ள நாயகர்கள் இணைந்து நடிப்பது. அவ்வகையில், தமிழ் சினிமாவில் வெளிவந்த டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் இங்கே...

தளபதி - டபுள் ஹீரோ சப்ஜெக்ட்ல இன்னைக்கு வரைக்கும் இருக்குற பெஸ்ட் படங்களில் ஒண்ணுனா அது தளபதிதான். ரஜினி - மம்முட்டி கெமிஸ்ட்ரி அப்படி வொர்க் ஆயிருக்கும்.

அன்பே சிவம் - எவர்கிரீன்... ஃபீல் குட்... படங்களில் அன்பே சிவம் படத்துக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மெண்டர் ரோல்ல கமலும் கொஞ்சம் ஆர்வக்கோளாறு ரோல்ல மாதவனும் செமயா நடிச்சிருப்பாங்க.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

இளமை ஊஞ்சல் ஆடுகிறது - கமல் - ரஜினி கடைசியாக சேர்ந்து நடிச்ச படம் இதுதான். அவங்க சேர்ந்து நிறைய படங்கள் நடிச்சிருந்தாலும் இந்தப் படம் இரண்டு பேருடைய ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் படம்தான். ஏன்னா, யாருக்கு ரசிகர்கள் அதிகம்னு அடிச்சு காட்டியிருக்காங்க.

அக்னிநட்சத்திரம் - பிரபுவும் கார்த்தியும் சேர்ந்து நடிச்ச படம் இது. இரண்டு பேருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஸ்பேசை ரொம்ப அழகா பயன்படுத்தியிருப்பாங்க.

காதலா காதலா - முழுக்க முழுக்க காமெடி நிறைந்த ஒரு திரைப்படம்... அதுவும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்ல. கேக்கவே செமயா இருக்குல்ல. கமல், பிரபுதேவா இரண்டு பேரும் அவங்களோட பெஸ்ட இந்த படத்துலயும் கொடுத்துருப்பாங்க.

ஃப்ரெண்ட்ஸ் - விஜய், சூர்யா இரண்டு பேரும் நடிச்ச படம். காமெடி, செண்டிமெண்ட், காதல்னு எல்லாமே செமயா கிளிக் ஆன திரைப்படம். இரண்டு பேரோட கரியர்லயும் பெஸ்ட் திரைப்படம்.

கூண்டுக்கிளி - சிவாஜி, எம்.ஜி.ஆர் இரண்டு பேரும் சேர்ந்து நடித்த திரைப்படம் இது. இந்தப் படம் திரையரங்குகளில் வந்தப்போ ரசிகர்களுக்கு இடையில் சண்டைலாம் நடந்துச்சாம். ரீ ரிலீஸ் ஆகும்போதும் சண்டைக் குறையலயாம்.

பிதாமகன் - விக்ரம், சூர்யா சேர்ந்து நடித்த திரைப்படம் இது. இரண்டு பேருமே நடிப்புல பின்னியிருப்பாங்க. விக்ரம், சூர்யா கரியர்ல மிகவும் முக்கியமான திரைப்படம் இது.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

விக்ரம் வேதா - மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம். இந்தப் படத்தின் கதை சொல்லல் முறையே ரொம்பவும் வித்தியாசமா இருக்கும். 

குருதிப்புனல் - கமல், அர்ஜூன் காம்போல வெளியான இந்தத் திரைப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பி.சி.ஸ்ரீராம் இயக்கியிருப்பதாலும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியது.

இந்தப் படங்களில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட் பண்ணுங்க. அப்படியே நாங்க எதாவது மிஸ் பண்ணியிருந்தாலும் சொல்லுங்க.