ட்விட்டர் ஓனர் எலான் மஸ்க்கின் தினசரி உணவு ரொட்டீன் என்ன? - தெரிஞ்சுக்கலாம் வாங்க!

சோஷியல் மீடியாக்கள்ல கடந்த சில நாள்களா டிரெண்டிங்ல இருக்குறது எலான் மஸ்க்கின் பெயர்தான். எல்லாரும் அவர் கடந்து வந்த பாதைகளைப் பற்றிலாம் பேசுறாங்க. நாம கொஞ்சம் வித்தியாசமா அவர் தினமும் என்ன சாப்பிடுவாருனு தெரிஞ்சுக்கலாமா?

எலான் மஸ்க் ரொம்பவே டேஸ்டான உணவுகளை விரும்பி சாப்பிடக்கூடியவர். ரொம்பவே டேஸ்டான உணவுகளை சாப்பிட்டு கொஞ்சம் நாள் வாழ்ந்தாலும் போதும்னுகூட சொல்லியிருக்காரு.

எலான் மஸ்க் தன்னுடைய கல்லூரி பருவத்தில் Hot dogs, Pepper, Oranges மற்றும் Pasta-வை விரும்பி உண்ணும் ஒருவராக இருந்துள்ளார்.

தினமும் காலையில் 7 மணிக்கு எழும்பும் எலான் மஸ்க் தன்னுடைய நாளை காபியுடன் ஆரம்பிப்பாராம்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

பெரும்பாலும் காலை உணவுகளை தவிர்க்கக்கூடியவராக எலாக் மஸ்க் உள்ளாராம். எனினும், சில சமயங்களில் ஆம்லேட்டை காலை உணவாக எடுத்துக்கொள்வார்.

மதிய உணவுக்கு French மற்றும் barbeque உணவுகளை எடுத்துக்கொள்வாராம்.

இரவு உணவுக்கு அதிக கலோரிகள் உள்ள உணவை எடுத்துக்கொள்வாராம்.

எலான் மஸ்க், டயக் கோக்கின் மிகப்பெரிய காதலர்.

விஸ்க்கி மற்றும் வொயினை தன்னுடைய மனநிலைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து விரும்பி எடுத்துக்கொள்வார்.